17,May 2024 (Fri)
  
CH
இலங்கை செய்தி

ஊரடங்கு உத்தரவை தளர்த்தத் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது

கொரோனா வைரஸ் தாக்கம் இப்போது ஒரு குறிப்பிட்ட அளவிற்கு கட்டுப்பாட்டில் உள்ளது என்றும் அரசாங்கம் படிப்படியாக ஊரடங்கு உத்தரவை தளர்த்தத் திட்டமிட்டுள்ளது என்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ள அவர், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 25 இலங்கையர்கள் பிரித்தானியாவில் உயிரிழந்துள்ளதாகவும் உறுதிப்படுத்தியுள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்கம் இப்போது ஒரு குறிப்பிட்ட அளவிற்கு கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், அரசாங்கம் படிப்படியாக ஊரடங்கு உத்தரவை தளர்த்தத் தொடங்கியுள்ளது. ஆரம்பத்தில், அரச மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலான ஊழியர்களுடன் செயற்படத் தொடங்கும் என அதில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ரயில்கள் மற்றும் பேருந்துகளில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை குறைக்கப்படும் என்றும் பாடசாலைகள் மற்றும் தனியார் வகுப்புகள் மறு அறிவித்தல் வரை மூடியே இருக்கும் என்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.

அத்தோடு பி.சி.ஆர். பரிசோதனை தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றும் தனிமைப்படுத்தல் மையங்கள் திறந்து வைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ள அவர், இயல்புநிலையை மீட்டெடுக்கத் தொடங்கிய பிறகும், சில பகுதிகளை தனிமைப்படுத்தி முடக்கவும், ஊரடங்கு உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டிய தேவையும் ஏற்படலாம் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்




ஊரடங்கு உத்தரவை தளர்த்தத் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு