இந்தியாவில் கோவிட்-19 பாதிப்பு 63 ஆயிரத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. கடந்த மூன்று நாட்களாக புதிதாக 3 ஆயிரம் பேருக்கும் மேல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் மட்டும் 20 ஆயிரம் பேருக்கு மேல் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டின் மொத்த பலி 2 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
ராஜஸ்தானில் புதிதாக 84 பேருக்கு கோவிட்-19 பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 3,898ஆக அதிகரித்துள்ளது. தற்போது 1,537 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வேலூரில் இருந்து இன்று நண்பகல் 12 மணிக்கு ஹௌராவிற்கு சிறப்பு ரயில் ஒன்று புலம்பெயர் தொழிலாளர்களுடன் புறப்பட்டுச் செல்கிறது.
கோவிட்-19 இல்லாத உலகை கட்டமைக்க தொழில்நுட்பம் பல்வேறு வகைகளில் உதவி செய்து வருகிறது. இதற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினரையும் நான் வணங்குகிறேன். இத்தகைய தொழில்நுட்பத்தை நாம் சிறந்த முறையில் பயன்படுத்தி சுகாதாரமான மற்றும் மேம்பட்ட உலகை உருவாக்குவோம் - பிரதமர் மோடி
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 4,000 பேருக்கும் மேற்பட்டோர் கோவிட்-19ஆல் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்த எண்ணிக்கை இதுவரை இல்லாத புதிய உச்சம் என்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. அதிகபட்சமாக மகாராஷ்டிர மாநிலத்தில் 1,943 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
ஏர் இந்தியா விமானம் 1387 மூலம் மணிலா, பிலிப்பைன்ஸில் இருந்து இந்தியர்கள் மும்பை திரும்புகின்றனர்.
அமெரிக்காவில் இருந்து வரும் ஏர் இந்தியாவின் முதல் சிறப்பு விமானம் மூலம் 225 இந்தியர்கள் சொந்த ஊர் திரும்புகின்றனர். இந்த விமானம் சான் பிரான்சிஸ்கோவில் இருந்து மும்பை நகருக்கு வருகிறது
0 Comments
No Comments Here ..