19,May 2024 (Sun)
  
CH
இலங்கை செய்தி

பிரதமர் விடுத்துள்ள விசேட அறிக்கை

கொவிட் -19 நோய் பரவலை கட்டுப்படுத்தும் செயற்பாடும் மக்களின் இயல்பு வாழ்க்கையை மீள் ஆரம்பிப்பதும் சமநிலையில் முன்னெடுக்கப்பட வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ அறிக்கை ஒன்றை விடுத்து தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் கீழ் வரும் விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இலங்கையில் முதல் கொரோனா வைரஸ் தொற்றாளர் கடந்த மார்ச் மாதம் 10 ஆம் திகதியே கண்டுபிடிக்கப்பட்டார். தற்போது கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதில் உலகின் முன்னணி நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும்.

இதற்காக அரச வைத்தியர்கள், தாதியர் உள்ளிட்ட சுகாதாரத் துறையினர், புலனாய்வு பிரிவினர், முப்படையினர், பொலிஸார் மற்றும் பொது சுகாதார அதிகாரிகள் உள்ளிட்டோர் அளபரியை சேவையை வழங்கி வருகின்றனர்

அவர்கள் தொடர்பில் பெருமையடைகின்றேன்.

இதுவரை ஒன்பது இலங்கையர்கள் மாத்திரமே கொவிட் 19 தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

கடந்த நவம்பர் 16 ஆம் திகதி நாட்டின் ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஸ தெரிவாகாதிருந்தால் இந்த வெற்றியை பெற்றிருக்க முடியாது.

ஊரடங்கு உத்தரவு படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகின்றது.

அரச மற்றும் தனியார் துறைகளில் குறைந்த எண்ணிக்கையிலான ஊழியர்களை பணியிடங்களுக்கு அழைத்து வருவதன் மூலமும், பஸ் வண்டிகள் மற்றும் ரயில் வண்டிகளில் ஒரே நேரத்தில் பயணிக்கக்கூடிய பயணிகளின் எண்ணிக்கையை மட்டுப்படுத்துவதன் மூலமும், பாடசாலைகள், கல்வி நிறுவனங்களை மூடுவதன் மூலமும், முடிந்தவரை சமூக இடைவெளியை பேணுவதன் மூலமும் நாட்டில் வழமையான நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும்.

ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட பின்னரும், இதுபோன்ற சிந்தனைமிக்க நடத்தை அவசியம்.

கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது ஆனால் முழுமையாக ஒழிக்கப்படவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

கொரோனா நோயாளிகளைக் கண்டறிய தொடர்ந்தும் பரிசோதனைகள் இடம்பெறுவதோடு தனிமைப்படுத்தல் மையங்களும் செயற்படும்.

எதிர்வரும் நாட்களிலும் நோயாளர்களை தனிமைப்படுத்தவும், பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு உத்தரவை பிறப்பிக்கவும் அவசியம் ஏற்படலாம்.


கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தவும், நாட்டை இயல்பு நிலைக்கு கொண்டு வரவும் சுகாதாரத் துறையினர், முப்படையினர், மற்றும் பொலிஸார் ஆகியோருக்கு வழங்கிய ஒத்துழைப்பை போன்றே தொடர்ந்தும் வழங்கி நாட்டை முழுமையாக இயல்பு நிலைமைக்கு கொண்டுவர ஒத்துழைக்குமாறு பிரதமர் நாட்டு மக்களை கேட்டுள்ளார்.´




பிரதமர் விடுத்துள்ள விசேட அறிக்கை

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு