இந்தியாவின் முன்னாள் பிரதமரும், பொருளாதார நிபுணருமான மன்மோகன் சிங் நெஞ்சு வலியின் காரணமாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என ஏ.என்.ஐ செய்தி முகமை தகவல் வெளியிட்டது.
இந்நிலையில் அவரது உடல்நிலை குறித்து எய்ம்ஸ் மருத்துவமனை தகவல் வெளியிட்டுள்ளது.
புதிய மருந்தொன்றை எடுத்துக்கொண்ட பிறகு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு காய்ச்சல் ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார். காய்ச்சல் ஏற்பட்டதற்கான வேறு காரணங்கள் குறித்து ஆராயப்பட்டு வருகிறது. எய்ம்ஸ் கார்டியோடோராசிக் மையத்தின் மருத்துவர்கள் குழுவின் பராமரிப்பில், அவர் நிலையான உடல்நிலையில் உள்ளார்" என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, கொரோனாவால் இந்தியப் பொருளாதாரம் மிக மோசமாக பாதிக்கப்படும் என தொடர்ந்து மன்மோகன் தெரிவித்து வந்தார்.

மேலும், மாநிலங்களுக்குத் தேவையான நிதியை மத்திய அரசு ஒதுக்கவில்லை என்றும் குற்றஞ்சாட்டினார்.
0 Comments
No Comments Here ..