கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக சவுதி அரேபியா, மதிப்பு கூட்டு வரிகளை மூன்று மடங்கு உயர்த்தியுள்ளது.
மேலும், வாழ்க்கை செலவு கொடுப்பனவை முற்றிலும் ரத்து செய்தும் சவுதி அரேபிய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே இறங்குமுகத்தில் இருந்து வந்த கச்சா எண்ணெய் விலை, கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சி அடைந்தது, எண்ணெய் வளத்தை நம்பி இருக்கும் சவுதி அரேபியாவின் பொருளாதாரத்தை புரட்டிப்போட்டு விட்டது.
கச்சா எண்ணெய் சந்தையை சார்ந்திருக்கும் நிலையில் இருந்து மாறும் வகையில், இரண்டாண்டுகளுக்கு முன்பு முதல் முறையாக மதிப்பு கூட்டு வரியை சவுதி அரேபியா கொண்டுவந்தது.
ஜூலை மாதம் ஒன்றாம் தேதி முதல், சவுதி அரேபியாவில் மதிப்பு கூட்டு வரி ஐந்து சதவீதத்திலிருந்து 15ஆக அதிகரிக்கப்படுவதாக அந்த நாட்டின் அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த நடவடிக்கைகள் கடினமானவை. ஆனால், இது நீண்டகால அடிப்படையில் நாட்டின் பொருளாதாரத்திற்கு அவசியமானதும் கூட" என்று சவுதி அரேபியாவின் நிதியமைச்சர் முகமது அல்-ஜாதான் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
0 Comments
No Comments Here ..