ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தங்களுடைய அரசியல் தலைவர் இல்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.
ஒரு தொலைக்காட்சியில் இடம்பெற்ற நேர்காணலின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
அத்துடன் அரசாங்கத்தினால் அமைச்சின் செயலாளர்களாக நியமிக்கப்படும் ஓய்வு பெற்ற இராணுவ வீரர்கள் தொடர்பில் அதிருப்தியின்மையை வெளியிட்டார்.
ஐக்கிய தேசிய முன்னணியின் அரசாங்கத்தில் ஓய்வுபெற்ற இராணுவீரர் எவரேனும் அமைச்சின் செயலாளராக கடமையாற்றவில்லையா என வினவப்பட்டது.
இதற்கு பதிலளித்த அவர் சில அமைச்சுக்களில் கடமையாற்றியுள்ளதாகவும், அரசியல், பொருளாதாரம், உள்ளிட்ட பல்வேறு விடயங்களை நன்கறிந்த பலர் காணப்படுகின்ற நிலையில் ஏன் இவர்கள் நியமிக்கப்படுகின்றனர் எனவும் அஜித் பி பெரேரா வினவினார்.
இந்நிலையில் இலங்கையில் பாதுகாப்பு செயலாளராக கடமையாற்றி யுத்தத்தை வெற்றிகொண்டதை ஏற்றுக்கொள்கின்றீர்களா என வினவப்பட்டது.
ஆம் என பதிலளித்த அஜித் பி பெரேரா , அவர் ஜனாதிபதியாக ஆற்றுகின்ற கடமைகள் ஏற்றுக்கொள்ள கூடியவை அல்ல தெரிவிக்கையில், உங்களின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் சேவையை ஏற்றுக்கொள்கின்றீர்களா என வினவப்பட்டது.
இந்நிலையில், அவர் எமது தலைவர் இல்லை என அஜித் பி பெரோரா தெரிவித்தார்.
0 Comments
No Comments Here ..