02,May 2024 (Thu)
  
CH
உலக செய்தி

உலகளவில் கொரோனாவின் பாதிப்பு நிலை

கொரோனா தாக்கத்தால் மிகக் கடுமையான பாதிப்புக்குள்ளான அமெரிக்காவில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 80,000 ஐ கடந்துள்ளது.

கொரோனாவினால் ஏற்பட்ட பொருளாதார சரிவை சரி செய்ய மிகச் சடுதியான நடவடிக்கைகளில் சவுதி அரேபியா இறங்கியுள்ளது. பொருட்களிற்கு 3 மடங்கு வரி விதிக்கப்பட்டுள்ளதுடன், பொதுமக்களின் உதவித் தொகைகளையும் நிறுத்தியுள்ளது.

24 மணி நேரத்தில் 11,656 புதிய தொற்றாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று செவ்வாய்க்கிழமை முதல் ரஷ்யா கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டை தளர்த்தத் தொடங்கும் என்று பிரதமர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். ரஷ்யாவில் குறைந்தது 221,344 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், COVID-19 இனால் 2,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

ஐரோப்பாவில் மிகக் கடுமையான தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட இரண்டு நாடுகளான பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் ஆகியவை கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க விதித்த கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்திக் கொண்டிருக்கின்றன.

உலகளவில், கொரோனா வைரஸினால் 4,253,802 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 287,250 பேர் உயிரிழந்துள்ளனர். 1,527,002 பேர் கணமடைந்தனர்.

நேற்று 3,403 பேர் உலகளவில் உயிரிழந்தனர்.

அமெரிக்கா

நேற்று அமெரிக்காவில் 1,008 பேர் உயிரிழந்தனர். இதுவரை 81,795 பேர் உயிரிழந்துள்ளனர். புதிதாக 18,196 பேர் பாதிக்கப்பட்டனர். இதுவரை 1,385,834 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளை மாளிகைக்குள் கொரோனா தொற்று கண்டறியப்பட்டதை தொடர்ந்து, அங்கு பணியாற்றும் ஊழியர்களிற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அலுவலகத்தில் தமது மேசைகளில் கடமையாற்றும் நேரம் தவிர்ந்த ஏனைய நேரங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

லொக் டவுன் கட்டுப்பாடுகளிற்கு எதிராக அமெரிக்காவில் போராட்டங்கள் நடந்து வந்தாலும், பெரும்பாலான அமெரிக்கர்கள் இந்த போராட்டங்களை ஆதரிக்கவில்லையென்பது கருத்துக் கணிப்பின் மூலம் தெரிய வந்தது.

The University of Chicago Divinity School மற்றும் The Associated Press-NORC Center for Public Affairs Research ஆகியன இணைந்து நடத்திய ஆய்வில் 55 வீதமான மக்கள் போராட்டங்களை ஆதரிக்கவில்லை, 31 வீதமானவர்களே போராட்டத்தை ஆதரிக்கிறார்கள் என்பது தெரிய வந்தது.

பிரேஸில்

நேற்று பிரேஸிலில் 502 பேர் உயிரிழந்தனர். மொத்த உயிரிழப்பு 11,625 பேர் உயிரிழந்துள்ளனர். புதிதாக 6,444 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 169,143 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பிரேசிலில் சலூன், ஜிம்களை அத்தியாவசிய சேவைகளாக ஜனாதிபதி பிரகடனப்படுத்தியுள்ளார். லொக் டவுன் நீடித்தாலும் அவை திறக்கலாம்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக லொக் டவுனை உள்ளூராட்சி நிர்வாகங்கள் அமுல்ப்படுத்தியிருந்தாலும், பிரேஸிலின் வலதுசாரி ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ அதை எதிர்த்து வருகிறார்.

பிரான்ஸ்

நேற்று 263 பேர் உயிரிழந்தனர். இதுவரை 26,643 பேர் உயிரிழந்துள்ளனர். புதிதாக 453 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 177,423 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பிரித்தானியா

நேற்று 210 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு 32,065 பேர் உயிரிழந்துள்ளனர். புதிதாக 3,877 பேர் பாதிக்கப்பட்டனர். இதுவரை 223,060 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஸ்பெயின்

நேற்று 123 பேர் உயிரிழந்தனர். மொத்த உயிரிழப்பு 26,744 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக 3,480 பேர் தொற்றிற்குள்ளாகினர். இதுவரை 268,143 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இத்தாலி

நேற்று 179 பேர் உயிரிழந்தனர். மொத்த உயிரிழப்பு 30,739 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக 744 பேர் பாதிக்கப்பட்டனர். இதுவரை 219,814 பேர் பாதிக்கப்பட்டனர்.

ரஷ்யா

நேற்று 94 பேர் உயிரிழந்தனர். மொத்த உயிரிழப்பு 2,009 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக 11,656 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக 221,344 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக அதிக தொற்றிற்குள்ளானவர்களை பதிவு செய்தது ரஷ்யா.

கனடா

நேற்று 123 பேர் உயிரிழந்தனர். மொத்த உயிரிழப்பு 4,993 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக 1,133 பேர் பாதிக்கப்பட்டனர். மொத்தமாக 69,981 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மெக்ஸிக்கோ

நேற்று 112 பேர் உயிரிழந்தனர். மொத்த உயிரிழப்பு 3,465 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக 1,562 பேர் தொற்றிற்குள்ளகினர். இதவரை 35,022 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

செனகல்

மசூதிகள் மற்றும் தேவாலயங்கள் மீண்டும் திறக்கப்படலாம் என்றும், விதிக்கப்பட்டுள்ள பிற கட்டுப்பாடுகளை தளர்த்தலாம் என்றும் செனகல் ஜனாதிபதி மேக்கி சால் அறிவித்துள்ளார்.

நேற்று அந்த நாட்டில் அதிகளவானவர்கள் தொற்றிற்குள்ளாகினர். 177 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். தற்போது நாளாந்த தொற்று அதிகரித்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் முதல் அந்த நாட்டில் வழிபாட்டிடங்கள் மூடப்பட்டு, இரவில் ஊரடங்கு அமுலில் உள்ளது.

இதுவரை செனகலில் 19 உயிரிழப்புக்கள் பதிவாகின. இதுவரை 1,886 பேர் பாதிக்கப்பட்டனர்.




உலகளவில் கொரோனாவின் பாதிப்பு நிலை

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு