15,Jan 2025 (Wed)
  
CH
உலக செய்தி

கொரோனா தொற்று உலகளவில்

உலக அளவில் கொரோனா தொற்று பாதிப்புக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 292,893ஆக அதிகரித்துள்ளதாக ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் மையம் (சிஎஸ்எஸ்இ) தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் உள்ள 180 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் இருந்து இதுவரை 43,42,345 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களில் 46,342 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. உலகம் முழுவதும் தொற்றுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,92,893 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 16,02,441 பேர் குணமடைந்து வீடு திரும்புயுள்ளனர்.

தொற்று பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையில் அமெரிக்க தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. அங்கு இதுவரை 14,08,636 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 83,425 பேர் பலியாகியுள்ளனர் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இறப்புகளைக் கொண்ட பிற நாடுகளில் ஸ்பெயின், இத்தாலி, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகியவை அடங்கும்.

அமெரிக்காவில் நேற்று 1,630 பேர் உயிரிழந்தனர்.

பிரேஸிலில் 779, இங்கிலாந்து 627, பிரான்ஸ் 348 உயிரிழப்புக்கள் பதிவாகின.




கொரோனா தொற்று உலகளவில்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு