கொவிட் 19 தாக்கம் காரணமாக வவுனியாவில் பூட்டப்பட்டிருந்த சிகையலங்கார நிலையங்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி இன்று (13) திறக்கப்பட்டுள்ளன.
பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் சிகையலங்கார நிலையங்களின் உரிமையாளர்களிடையில் நேற்று முன்தினம் (11) இடம்பெற்ற கலந்துரையாடல் இடம்பெற்றதுடன் சில விதிமுறைகளும் விதிக்கப்பட்டன.
இதன் போது சிகையலங்கரிப்பு நிலையத்தை நடாத்துவதற்கான சான்றிதழ் சுகாதார வைத்திய அதிகாரியிடம் பெறப்பட்டு காட்சிப்படுத்த வேண்டும், முடிவெட்டுதல்- முடிக்கு டை பூசுவதல் மட்டுமே செய்ய வேண்டும், பணியாளர்களும்- வாடிக்கையாளர்களும் சவர்காரமிட்டு கை கழுவுவதற்கான ஏற்பாட்டினை நிலையத்திற்கு உள்ளேயும், வெளியேயும் செய்தல் வேண்டும், பணியாளர்கள் கட்டாயமாக முககவசம் மற்றும் பாதுகாப்பு கண்ணாடி அணிந்திருக்க வேண்டும், காலினால் செயற்படுத்தப்படும் கழிவகற்றல் கூடை இருக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.
இதனை பின்பற்றி சுகாதார வைத்திய அதிகாரிகளின் சிபாரிசினை பெற்று வவுனியாவில் பெரும்பாலான சிகையலங்கார நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
0 Comments
No Comments Here ..