15,Jan 2025 (Wed)
  
CH
இலங்கை செய்தி

கொரோனா அச்சத்தால் தனிப்படுத்தலில் இருந்தவர்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்

வவுனியா பம்பைமடு இராணுவ முகாமில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தல் முகாமுக்கு கடந்த இருவாரங்களிற்கு முன்னர் கடற்படையை சேர்ந்த குடும்பத்தினர்கள் அழைத்து வரப்பட்டிருந்தனர்.

வெலிசறையில் அமைந்துள்ள கடற்படை முகாமில் பணியாற்றிய 400 ற்கும் மேற்பட்ட கடற்படைஉத்தியோகத்தர்களிற்கு கோரோனோ தொற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில் குறித்த முகாமில் கடமையாற்றிய கடற்படை வீரர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் தனிமைப்படுத்தப்படுத்தும் நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் வவுனியா பம்பைமடுவில் அமைந்துள்ள குறித்த முகாமிற்கு கடற்படை உத்தியோகத்தர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் என 192 பேர் பேருந்துகளின் மூலம் அழைத்து வரப்பட்டு தனிமைப்படுத்தும் நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டிருந்தனர்.

தனிமைப்படுத்தப்பட்டவர்களிற்கான பிசிஆர் பரிசோதனைகளும் முன்னெடுக்கப்பட்டிருந்ததுடன் கோவிட் 19 தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்ட 129பேர் இன்றயதினம் தமது சொந்த இருப்பிடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டமைக்கான சான்றிதழ்களும் இதன்போது வழங்கிவைக்கப்பட்டது.

நாவலப்பிட்டி, அவிசாவளை, நுவரெலியா, கண்டி, குருணாகலை, மொனராகலை, கொழும்பு ஆகிய பகுதிகளை சேர்ந்த கடற்படை வீரர்களின் குடும்ப உறுப்பினர்களே இதன்போது விடுவிக்கப்பட்டனர்.

குறித்தமுகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 161 பேர் இதுவரை விடுவிக்கப்பட்டுள்ளதுடன் மேலும் 31பேர் குறித்த முகாமில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.




கொரோனா அச்சத்தால் தனிப்படுத்தலில் இருந்தவர்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு