பாகுபலி நடிகரான ராணா டகுபட்டியும், த்ரிஷாவும் ஒரு காலத்தில் காதலில் இருந்தார்கள். அதன்பின் இருவரும் பிரிந்தார்கள். த்ரிஷாவுக்கு வேறு ஒருவருடன் திருமண நிச்சயம் நடந்து இரத்தானது.
அதன்பின் ராணா, த்ரிஷா இருவரும் சில விழாக்களில் ஒன்றாக கலந்து கொண்டார்கள். அதனால், மீண்டும் இருவரும் காதலிக்க ஆரம்பித்துவிட்டார்கள் என்றார்கள். ஆனால், அதுவும் கிசுகிசுவோடு நின்று போனது.
பாகுபலி படத்தில் நடித்த பிறகு ராணா டகுபட்டி இந்திய அளவில் புகழ் பெற்ற நடிகரக மாறினார். சமீபத்தில் த்ரிஷாவின் பிறந்தநாளுக்குக் கூட ராணா வாழ்த்து தெரிவித்திருந்தார். அப்போது த்ரிஷாவை “பழைய தோழி“எனக் குறிப்பிட்டிருந்தார்.
அதன் அர்த்தம் இப்போது தான் தெரிய வந்துள்ளது. நேற்று (12) தன்னுடைய காதலியை இந்த உலகத்திற்கு அறிமுகப்படுத்தி இருக்கிறார் ராணா.
காதலி மிஹீகா பஜாயுடன் இருக்கும் புகைப்படத்தை டுவிட்டரில் பகிர்ந்து “அவள் சம்மதம் சொல்லிவிட்டாள்” எனப் பதிவிட்டிருக்கிறார்.
ராணாவுக்கு பலரும் வாழ்த்துகளைச் சொல்லி வருகிறார்கள்.
ஹைதராபாத்தில் வசிக்கும் மிஹீகா பஜாஜ், ஆடை வடிவமைப்பு மற்றும் திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளை ஒழுங்கமைக்கும் நிறுவனமொன்றை நடத்தி வருகிறார்.
0 Comments
No Comments Here ..