13,May 2024 (Mon)
  
CH
இந்திய செய்தி

நிர்மலா சீதாராமன் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கவுள்ளார்

கொரோனா வைரஸ் பாதிப்பால் இந்தியப் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்திருக்கும் நிலையில், பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுக்கும் வகையில் சிறப்புப் பொருளாதாரச் சலுகையை பிரதமர் நரேந்திர மோடி நேற்று (மே 13) அறிவித்தார். நேற்றிரவு 8 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடையே தொலைக்காட்சியில் உரையாற்றிய போது, இந்தியப் பொருளாதாரத்தை மீட்டெடுக்க, ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான பொருளாதார ஊக்குவிப்புத் திட்டத்தைத் தமது அரசு வகுத்துள்ளதாகவும் அதுகுறித்த முழு விவரங்களை நிதியமைச்சர்

நிர்மலா சீதாராமன் இன்று வெளியிடுவார் எனவும் மோடி கூறினார்.

இந்நிலையில், இன்று மாலை 4 மணிக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களைச் சந்திக்கவுள்ளார். அப்போது, பல்வேறு பொருளாதார அறிவிப்புகளை அவர் வெளியிடவுள்ளார். மத்திய ரிசர்வ் வங்கி அறிவித்த நிதிச் சலுகைகள், ஏற்கெனவே நிர்மலா சீதாராமன் அறிவித்த சிறப்புப் பொருளாதாரச் சலுகை ஆகியவற்றை உள்ளடக்கியதாக இச்சலுகை அறிவிப்பு இருக்கும் என்று கூறப்படுகிறது. இதில் என்னென்ன அம்சங்கள் இருக்கும் என்பதில் பல்வேறு துறையினரிடையே அதிக எதிர்பார்ப்பும் குழப்பமும் இருக்கிறது. அவற்றை விளக்கும் வகையில் நிர்மலா சீதாராமன் இன்று மாலை 4 மணிக்கு செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கிறார்.

எந்தெந்தத் துறைகளுக்கு எத்தனை கோடி ஒதுக்கப்படும், தொழில் நிறுவனங்களுக்கு என்னென்ன சலுகைகள் வழங்கப்படும் என்பது பற்றிய விரிவான விளக்கத்தை நிர்மலா சீதாராமன் இன்று மாலையில் வழங்குவார் என்று கூறப்பட்டுள்ளது. மார்ச் மாத இறுதியில் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்த ரூ.1.7 லட்சம் கோடி மதிப்பிலான பொருளாதாரச் சலுகையானது நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதை மட்டுமே மையமாக வைத்திருந்தது. மூன்று மாதங்களுக்கு நிதியுதவி, பெண்களுக்கு சிறப்பு நிதி, இலவமாக உணவு தானியங்கள் இலவசமாக சமையல் எரிவாயு போன்ற அறிவிப்புகள் அன்று வெளியிடப்பட்டிருந்தன.

இன்றைய அறிவிப்பானது நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கவும், தொழில் நிறுவனங்களின் வருவாயைப் பெருக்கவும், தொழிலாளர்களின் நலனைக் காக்கவும் உதவியாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இன்றைய அறிவிப்பில் வரிச் சலுகைகள் இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.




நிர்மலா சீதாராமன் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கவுள்ளார்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு