இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக இருக்கும் நிலையில் இந்த கொரோனா தொற்றில் இருந்து தப்பிக்க நடிகை சன்னி லியோன் தனது கணவர் குழந்தைகளுடன் அமெரிக்கா சென்றிருக்கிறார். இதை சன்னி லியோன் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார்.
அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள தனது கார்டனில் உள்ள வீட்டில் தற்போது குழந்தைகளுடன் பாதுகாப்பாக இருப்பதாகவும், கண்ணுக்கு தெரியாத வைரஸில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க இதுவே சரியான இடம் என்றும், தனது தாயார் இப்போது இருந்திருந்தால் இதைத்தான் செய்திருப்பார் என்றும் சன்னி லியோன் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் உலகம் முழுவதும் விமான சேவை நிறுத்தப்பட்டுள்ள நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சன்னி லியோன் எப்படி மும்பையில் இருந்து அமெரிக்கா சென்றார் என்ற கேள்விக்கு பதிலளித்து சன்னி லியோனின் கணவர், ‘அரசின் KLN விமானத்தில்தான் மும்பையில் இருந்து அமெரிக்க வந்ததாக தெரிவித்துள்ளார்.
0 Comments
No Comments Here ..