ரஜினிகாந்த் 2013ம் ஆண்டு டுவிட்டருக்குள் வந்தார். அவர் வந்தபின் சுமார் மூன்று வருடங்கள் கழித்து 2016 இல் தான் கமல்ஹாசன் டுவிட்டருக்குள் வந்தார். ஆனால் அதன்பின் ரஜினிகாந்த் பதிவிட்டதை விட கமல்ஹாசன் பதிவிட்டது தான் அதிகமாக இருக்கும்.
டுவிட்டரில் மட்டுமே அரசியல் செய்கிறார் என்றுகூட கமல்ஹாசன் மீது அடிக்கடி அரசியல் விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் களத்தில் இறங்கி தேர்தலில்போட்டியிட்டு கணிசமான வாக்குகளும் பெற்றார்.
இந்நிலையில் டுவிட்டரில் அவரைப் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை ரஜினிகாந்தை விட அதிகமாகியுள்ளது. ரஜினிகாந்திற்கு 57 லட்சம் பாலோயர்களும், கமல்ஹாசனுக்கு 60 லட்சம் பாலோயர்களும் தற்போது டுவிட்டரில் உள்ளார்கள்.
கடந்த வாரம் தான் கமல்ஹாசன் 60 லட்சத்தைக் கடந்தார். நடிகராகவும், அரசியல் கட்சித் தலைவராகவும் இருக்கும் கமல்ஹாசன் அடிக்கடி டுவீட்டுகள் போட்டாலும், தமிழ் நடிகர்களைப் பொறுத்தவரையில் தனுஷ் தான் 90 லட்சம் பாலோயர்களுடன் முதலிடத்தில் உள்ளார்.
0 Comments
No Comments Here ..