15,Jan 2025 (Wed)
  
CH
உலக செய்தி

இந்தோனேஷியாவில் ATM மூலம் அரிசி வழங்கள் நடவடிக்கை

இந்தோனேஷியாவில் கொரோனா பாதிப்பு தீவிரமாக உள்ளது. அங்கு 14 ஆயிரத்து 700 க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கையும் ஆயிரத்தை கடந்துள்ளது. அங்கு கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாதத்தில் இருந்து ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கால் அந்த நாடு பெரும் பொருளாதார சரிவை சந்தித்துள்ளது.

சிறு, குறு தொழில்களில் ஈடுபடுவோர் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். அங்கு கடந்த 6 வாரங்களில் 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வேலை இழந்துள்ளதாக அந்த நாட்டு நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள தினக்கூலி தொழிலாளர்கள், வறுமை கோட்டுக்கு கீழ் வாழ்பவர்கள் மற்றும் ஆதரவற்றோருக்கு ஏ.டி.எம். மூலம் இலவச அரிசி வழங்கப்படுகிறது.

தலைநகர் ஜகார்த்தா உள்ளிட்ட முக்கிய நகரங்களில் அரிசி ஏ.டி.எம். எந்திரங்கள் நிறுவப்பட்டு தினமும் ஆயிரம் நபர்களுக்கு 1.5 டன் அளவு அரிசி வினியோகிக்கப்படுவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.




இந்தோனேஷியாவில் ATM மூலம் அரிசி வழங்கள் நடவடிக்கை

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு