15,Jan 2025 (Wed)
  
CH
இலங்கை செய்தி

பிரித்தானியாவிலிருந்து இலங்கை வந்தடைந்த கழிவுக்கொள்கன்கள் மீண்டும் ஏற்றுமதி செய்ய நடவடிக்கை

பிரித்தானியாவிலிருந்து இலங்கை வந்தடைந்த கழிவுக்கொள்கன்கள் மீண்டும் ஏற்றுமதி செய்ய நடவடிக்கை

பிரித்தானியாவிலிருந்து சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் கழிவுப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை மீள் ஏற்றுமதி செய்வதற்கு மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட குறித்த கழிவுப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள், இலங்கை துறைமுக அதிகாரசபை வளாகம் மற்றும் கட்டுநாயக்க ஏற்றுமதி வலயத்தில் உள்ள தனியார் இடம் என்பனவற்றில் தற்போது களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளன.

சுற்றுச்சூழல் நீதி மையம் முன்வைத்த மனுவிற்கு அமைய, குறித்த கழிவுகள் அடங்கிய கொள்கலன்களை மீள் ஏற்றுமதி செய்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் அண்மையில் உத்தரவு பிறப்பித்திருந்தது.

இதன்படி, மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபையினால் மீள் ஏற்றுமதிகான நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவிலிருந்து இலங்கை வந்தடைந்த கழிவுக்கொள்கன்கள் மீண்டும் ஏற்றுமதி செய்ய நடவடிக்கை

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment

<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு