பிரான்ஸில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றிலிருந்து உயிர்களை காப்பாற்றிய மருத்துவர்களுக்கு, நன்றி செலுத்தும் நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பிரான்ஸின் தேசிய தினமான ஜூலை 14ஆம் திகதி, மருத்துவர்களுக்கு நன்றி செலுத்தும் நிகழ்வு இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசத்தை காப்பாற்றும் சேவையில் இராணுவத்தினருக்கு சமமாக மருத்துவர்கள் செயற்பட்டு வருவதால் அவர்களை பெருமைப்படுத்த இவ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸில் கடந்த மார்ச் மாதம் முதல் நடைமுறையில் இருந்த கொரோனா வைரஸ் தொற்று பரவல் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.
இதனால் மக்கள் தங்களது அன்றாட நடவடிக்கைகளை தடையின்றி மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பிறகு வைரஸ் தொற்றின் பாதிப்பு அதிகரித்து வருவதாக கூறப்படுகின்றது.
0 Comments
No Comments Here ..