15,Jan 2025 (Wed)
  
CH
இந்திய செய்தி

மத்தியப்பிரதேசத்தில் பேருந்தும் லொறியும் விபத்துக்குள்ளாகியுள்ளது

மத்திய பிரதேசத்தில் பேருந்து மீது லொறி மோதி விபத்திற்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 50 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

மகாராஷ்டிராவில் இருந்து உத்தரப்பிரதேசத்தில் உள்ள சொந்த இடங்களுக்கு தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற லொறியுடன் மத்தியப் பிரதேசம், குணாவில் உள்ள கேன்ட்.பி.எஸ். பகுதியூடாக வந்த பேருந்து மோதி விபத்துக்கு உள்ளானது.

இவ்விபத்து நேற்று (புதன்கிழமை) இரவு இடம்பெற்ற நிலையில் இதன்போது 8 தொழிலாளர்கள் உயிரிழந்ததுடன் மேலும் 50 பேர் படுகாயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மாவட்ட மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தவர்களின் உடல்களை காவல்துறை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பல்வேறு தரப்பினர் வேலையில்லாமல் கஷ்டப்பட்டு வருகின்றனர். தொழிலாளிகள் பலர் சொந்த ஊர்களில் வேலையில்லாமல் வெளி மாநிலங்களில் வேலைசெய்துவந்த நிலையில், இந்த ஊரடங்கினால் அவர்கள் சொந்த ஊருக்கே செல்லலாம் என நினைத்து ஆங்காங்கே நடந்தும், லொறிகளிலும் பயணம் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




மத்தியப்பிரதேசத்தில் பேருந்தும் லொறியும் விபத்துக்குள்ளாகியுள்ளது

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு