15,Jan 2025 (Wed)
  
CH
இந்திய செய்தி

பி.எம்.கேர்ஸ் நிதியில் இருந்து 3100 கோடி ரூபாய் நிதியொதுக்கப்பட்டுள்ளது

இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ventilator கொள்வனவிற்கு 2000 கோடி ரூபாயும், புலம் பெயர் தொழிலாளர்களின் நலனுக்காக 1000 கோடி ரூபாயும், கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து கண்டுப்பிடிக்கும் முயற்சிக்கு 100 கோடி ரூபாயும் ஒதுக்கப்படவுள்ளது.

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ventilators அனைத்தும் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளன.

புலம் பெயர் தொழிலாளர்கள், ஏழைகளுக்க உதவ மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்களுக்கு 1000 கோடி ரூபாய் ஒதுக்கப்படவுள்ளது.

இந்த பணம் மாநில, யூனியன் பிரதேச நிர்வாகங்கள், மாவட்ட ஆட்சியர் அல்லது நகராட்சி ஆணையர் மூலமாக புலம் பெயர் தொழிலாளர்களின் மருத்துவம், போக்குவரத்து, தங்குமிடம், உணவு ஆகியவற்றுக்கு பயன்படுத்தப்பட வேண்டும்.

இந்த பணம் மாநில பேரிடர் நிவாரண ஆணையர் மூலம் மாவட்ட ஆட்சியர் அல்லது நகராட்சி ஆணையர் ஆகியோருக்கு வழங்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.




பி.எம்.கேர்ஸ் நிதியில் இருந்து 3100 கோடி ரூபாய் நிதியொதுக்கப்பட்டுள்ளது

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு