15,Jan 2025 (Wed)
  
CH
இந்திய செய்தி

இந்தியாவில் கொரோனா தொற்று நிலவரம்

இந்தியாவில் கொரோனா பலி எண்ணிக்கை 2,649ஆக அதிகரித்துள்ளது. மொத்த பாதிப்பு 81,000ஐ தாண்டியுள்ளது. இதற்கிடையில் வழக்கமான பயணிகள் ரயில்களுக்கு ஜூன் 30 வரை செய்யப்பட்ட டிக்கெட் முன்பதிவுகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முழு தொகையும் திருப்பி அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் 145 ஷராமிக் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. கடந்த மே ஒன்றாம் தேதியில் இருந்து இதுவே அதிகபட்ச எண்ணிக்கை ஆகும்.

மணிப்பூரில் ஊரடங்கு உத்தரவை மீறியதால் 870 பேர் கைதாகியுள்ளனர். 696 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தற்போது வரை ரூ.1.03 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

* ஊரடங்கால் வாழ்வாதாரமின்றி தவிக்கும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு நடந்து போகும் சாலையில் ஒரு வழித் தடத்தை மட்டும் போக்குவரத்திற்கு பயன்படுத்தலாம். மற்றொன்றை தொழிலாளர்கள் நடைபயணத்திற்கு உதவும் வகையில் வழிகொடுக்கலாம். இது புலம்பெயர் தொழிலாளர்களுக்கு பெரிதும் உதவிகரமாக இருக்கும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

* டெல்லியில் இருந்து 602 பேருடன் புறப்பட்ட சிறப்பு ரயில் கேரள மாநிலத்தின் திருவனந்தபுரம் ரயில் நிலையத்தை வந்தடைந்தது.

மகாராஷ்டிர மாநிலத்தில் புதிதாக ஏற்பட்ட கொரோனா வைரஸ் பாதிப்பு இரண்டாவது பெரிய உச்சம் தொட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தின் மும்பை, புனேவில் உள்ள சிவப்பு மண்டலங்களில் மே 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

 கர்நாடக மாநிலத்திற்குள் வேறு மாவட்டங்களுக்கு செல்பவர்கள் கட்டாயம் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு விடுதிகளில் இலவசமாகவும், குறிப்பிட்ட தனியார் ஓட்டல்களில் கட்டணம் செலுத்தியும் தங்கிக் கொள்ளலாம். 14 நாட்கள் முடியும் வரை யாரும் தங்கள் வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

கோலாலம்பூரில் இருந்து 117 பயணிகளுடன் புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் 1385 விமானம் ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று இரவு 10.12 மணிக்கு வந்து சேர்ந்தது.




இந்தியாவில் கொரோனா தொற்று நிலவரம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு