பெதுறுதுடுவ - மந்திகாய் பிரதேசத்தில் கட்டளையினை மீறி பயணித்த உந்துருளியாளர் மீது இராணுவத்தினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
நேற்று இரவே இவ்வாறு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த நபர் இராணுவ உத்தியோகத்தர் ஒருவரை தாக்கி விட்டு தப்பி செல்ல முற்பட்ட போத இவ்வாறு துப்பாக்கி சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் துப்பாக்கி சூட்டில் காயமடைந்த குறித்த நபர் பெதுறுதுடுவ - மந்திகாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கல் ஒன்றினால் இராணுவ சிப்பாய் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் இராணுவ சிப்பாய் தற்போது பலாலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடுக பிரிவு தெரிவித்துள்ளது.
0 Comments
No Comments Here ..