02,May 2024 (Thu)
  
CH
உலக செய்தி

நியூயோர்க் ஆளுனர் ஆண்ட்ரூ க்யூமோ தொலைக்காட்சி நேரலையில் கொரோனா பரிசோதனை செய்துகொண்டார்

கொரோனா தொற்றுக்கான அறிகுறியை உணரும் நியூயோர்க்வாசிகள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

அமெரிக்காவில் பிற மாகாணங்களைவிட நியூயோர்கில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது. நியூயோர்க்கில் கவர்னர் க்யூமா தொலைக்காட்சி நேரலை மூலம் மக்களுடன் தொடர்பில் இருந்து வருகிறார். கொரோனா குறித்த தகவல்களை நேரலையில் மக்களுடன் பகிர்ந்து வருகிறார். இந்நிலையில் அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது தொலைக்காட்சி நேரலையில் ஒளிபரப்பானது

இதுகுறித்து ஆண்ட்ரூ க்யூமோ அளித்த பேட்டியில் கூறியதாவது:

”கொரோனா பரிசோதனையை செய்துகொள்ள அதிக நேரம் பிடிக்காது. உடனடியாக செய்துகொள்ளலாம். கொரோனா அறிகுறியை உணரும் நியூயோர்க்வாசிகள் பரிசோனை செய்து கொள்ள வேண்டும். அவர்கள் மட்டுமல்ல, வேலைக்குச் செல்பவர்கள், மக்களுடன் நேரடித் தொடர்பில் இருப்பவர்கள், நோயாளிகளைக் கவனித்து வருபவர்கள் என நோய்த் தொற்று ஏற்படுவதற்கான சாத்தியங்கள் இருப்பவர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

இதுவரையில் குறைவான நபர்களே தாமாக முன்வந்து பரிசோதனை செய்துள்ளனர். தற்போது கட்டுப்பாடுகளில் தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டு கடைகள் உள்ளிட்டவை திறக்கப்பட்டு மக்கள் புழக்கம் அதிகரித்து வருகிற நிலையில், அனைவரும் பரிசோதனை செய்துகொள்வது அவசியம்”

இவ்வாறு கியூமோ தெரிவித்தார்.

அமெரிக்காவில் 15 இலட்சம் பேர் அளவில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ள நிலையில், 90 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். இதில், நியூயோர்க்கில் மட்டும் 3.5 இலட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அங்கு 22,619 பேர் பலியாகி உள்ளனர்.




நியூயோர்க் ஆளுனர் ஆண்ட்ரூ க்யூமோ தொலைக்காட்சி நேரலையில் கொரோனா பரிசோதனை செய்துகொண்டார்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு