கொரோனா அச்சுறுத்தல் உலகெங்கிலும் பெரும் மனிதப்பேரழிவுகளை ஏற்படுத்தி வரும் நிலையில், அதிலிருந்து தங்களை தற்காத்துக் கொள்ளும் முயற்சியிலேயே அனைவரும் ஈடுபட்டு வருகின்றனர்.
சுவாசத்துடன் அதிகளவில் இந்த வைரஸ் பரவும் என்பதால் முகக்கவசங்களை பல நாடுகளும் கட்டாயப்படுத்தியுள்ளன.
இந்நிலையில், கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருக்கும் பாதுகாத்துக் கொள்ளும் வகையில் புதிய தலைக்கவசத்தை கனடா நாட்டைச் சேர்ந்த ஒருவர் வடிவமைத்துள்ளார்.
இந்த தலைக்கவசம் வெளிக்காற்றை சுத்தப்படுத்தி உள்ளே அனுப்பவும், சுவாசிக்கும் காற்றை வெளியேற்றவும் சிறிய ‘மோட்டர்’ பொருத்தப்பட்டுள்ளது. மேலும் நமது கண்கள், மூக்கு, வாய் போன்ற உறுப்புகளை நாமே தொடமுடியாத வகையில் இந்த தலைக்கவசம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
‘பயோவைஸர் 1.0’ (biovyzr 1.0) என பெயரிடப்பட்டுள்ள இந்த தலைக்கவசத்தின் பெறுமதி 170 அமெரிக்க டொலர்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவ பணியாளர்களுக்கு இந்த தலைக்கவசம் உதவிகரமாக இருக்கும் என நம்பப்படுகிறது.
0 Comments
No Comments Here ..