முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் பொதுவாக ஒன்லைன் ஸ்டோர்களை வைத்திருக்கின்றன.
அவற்றில் சில மக்களுக்கு நேரடியாக சேவையினை வழங்கக்கூடிய ஸ்டோர்களையும் கொண்டிருக்கின்றன.
இவற்றின் வரிசையில் கூகுள் நிறுவனமும் Offline ஸ்டோர்களை நிறுவுவதற்கு திட்டமிட்டுள்ளது.
இதன் மூலம் மக்கள் அருலுள்ள கூகுள் ஸ்டோரிலிருந்து சேவைகளைப் பெற்றுக்கொள்ள வாய்ப்பாக இருக்கும்.
முதற்கட்டமாக இந்தியாவில் இந்த ஸ்டோர்களை கூகுள் அமைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பைலட் முறையில் அமைக்கப்படும் இந்த ஸ்டோர்களின் சேவை வெற்றியளிக்கும் பட்சத்தில் ஸ்டோர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
0 Comments
No Comments Here ..