06,May 2024 (Mon)
  
CH
உலக செய்தி

பிரேஸிலில் கொரோனா வைரஸ் தொற்றின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பு

பிரேஸிலில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுக்கு தினசரி பாதிப்பின் அதிகபட்ச எண்ணிக்கை பதிவாகியுள்ளது.

கடந்த 24 மணித்தியாலத்தில் பிரேஸிலில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு 21,472பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 911பேர் உயிரிழந்துள்ளனர்.

பிரேஸிலில் கொரோனா வைரஸ் தொற்று பரவியதிலிருந்து பதிவான அதிகபட்ச பாதிப்பு எண்ணிக்கை இதுவாகும்.

வைரஸ் தொற்று பரவிய ஆரம்ப காலத்தில் தொற்று வீதம் குறைவாகவே இருந்தது. எனினும், ஜனாதிபதி கட்டுப்பாடுகளை இறுக்கமாக்காமல், எளிதாக்கியதன் விளைவாக தற்போது அங்கு பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து செல்கின்றது.

கடந்த வாரத்தில் பிரேஸிலில் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்த, ஐந்தாவது நாள் இதுவாகும்.

இதற்கமைய பிரேஸிலில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இதுவரை மொத்தமாக 293,357பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு. 18,894பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், கொரோனா வைரஸ் தொற்றுக்கு 157,780 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 116,683பேர் குணமடைந்துள்ளனர். இதுதவிர 8,318பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.




பிரேஸிலில் கொரோனா வைரஸ் தொற்றின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு