15,Jan 2025 (Wed)
  
CH
இந்திய செய்தி

புலம்பெயர் தொழிலாளர்களின் இரத்தம், வியர்வையில் தான் நாடு இயங்கி வருகின்றது – பிரியங்கா காந்தி

புலம்பெயர் தொழிலாளர்களின் இரத்தம், வியர்வையில் தான் நாடு இயங்கி வருகின்றது என பிரியங்கா காந்தி மத்திய அரசை சாடியுள்ளார்.

பிரியங்கா காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், புலம்பெயர் தொழிலாளர்கள் நாட்டின் முதுகெலும்பு என்று அவர் கூறியுள்ளார்.

புலம்பெயர் தொழிலாளர்களின் இரத்தம், வியர்வையில் தான் நாடு இயங்கி வருவதாக மத்திய அரசை சாடியுள்ள அவர், தொழிலாளர்களின் நலனை பேணுவதற்கு அனைவருக்கும் பொறுப்பு உள்ளதாக தெரிவித்துள்ளார்.

அரசியல் செய்வதற்கான நேரம் இதுவல்ல என்று குறிப்பிட்டுள்ள பிரியங்கா, காங்கிரஸ் வழங்கிய பேருந்துகளை பாஜக தான் ஏற்பாடு செய்தது என்று விளம்பரப்படுத்த விரும்பினாலும் செய்து கொள்ளுங்கள் என்றும் கூறியுள்ளார்.

மேலும் காலதாமதம் செய்யாமல் புலம்பெயர்ந்து செல்லும் தொழிலாளர்கள், அதனை பயன்படுத்த அனுமதி அளிக்க வேண்டும் என்றும் உத்தரப்பிரதேச முதமைச்சர் யோகி ஆதித்யநாத்தை பிரியங்கா காந்தி கேட்டுக்கொண்டுள்ளார்.




புலம்பெயர் தொழிலாளர்களின் இரத்தம், வியர்வையில் தான் நாடு இயங்கி வருகின்றது – பிரியங்கா காந்தி

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு