15,Jan 2025 (Wed)
  
CH
இந்திய செய்தி

அனுமதியின்றி தொழுகை மேற்கொண்டதால் 500 இற்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு

மதுரை மகபூப்பாளையத்தில் அனுமதியின்றி தொழுகை நடத்திய 550 ஆண்கள் மற்றும் 50 பெண்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதிலும் பொது ஊரடங்கு அமுலில் உள்ளது. இதன் காரணமாக பொது இடங்களில் கூடும் மக்கள் தனிமனித இடைவெளியை கடைபிடித்தல், கிருமி நாசினியை பயன்படுத்துதல், முகக் கவசம் அணிதல் உள்ளிட்டவைகளை கடைபிடிக்க வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மதுரை மகபூப்பாளையம் பகுதியின் அன்சாரி தெருவில் அமைந்துள்ள பொதுப்பாதையில், தனிமனித இடைவெளியை கடைபிடிக்காமல் கிட்டத்தட்ட 500 இற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் இரவு 9 மணிக்கு முதல் 10.25 வரை தொழுகை நடத்தியுள்ளனர்.

இதனையடுத்து தகவலறிந்து நிகழ்விடத்திற்கு சென்ற எஸ்எஸ் காலனி காவல்துறையினர் 550 ஆண்கள் மற்றும் 50 பெண்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




அனுமதியின்றி தொழுகை மேற்கொண்டதால் 500 இற்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு