கொரோனா வைரஸ் காரணமாக இலங்கையில் வறுமை நிலை அதிகரிப்பது தவிர்க்க முடியாத விடயம் என கொழும்பு பல்கலைகழகத்தின் பொருளியல் பேராசிரியர் சிறிமால் அபயரட்ண தெரிவித்துள்ளார்.
வறுமையை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டியது அரசாங்கத்தின் கடமை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நகரப்பகுதிகளில் வாழும் வறிய மக்களே இவ்வாறு வறுமையினால் அதிகளவு பாதிக்கப்படப்போகின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இவர்கள் நாளாந்தம் உழைப்பவர்கள், முறைசார தொழில்துறைகளில் உள்ளவர்கள் மேலும் கிராமங்களில் உள்ள வறியவர்கள் போல இவர்கள் விவசாயத்திலும் ஈடுபடுவதில்லை எனவும் பேராசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையை தடுத்து நிறுத்துவதற்கு அரசாங்கங்கள் குறுகிய கால நீண்ட கால நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் எனவும் கொழும்பு பல்கலைகழகத்தின் பொருளியல் பேராசிரியர் சிறிமால் அபயரட்ண சுட்டிக்காட்டியுள்ளார்.
குறுகிய காலத்தில் வறுமையை கட்டுப்படுத்துவதற்காக பல வழிகளில் நிதியை செலவிடவேண்டியிருக்கும் எனவும், பல நாடுகளில் வேலைவாய்ப்பற்ற நிலையில் உள்ளவர்களிற்கு கொடுப்பனவுகளை வழங்கவேண்டியிருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்
அத்துடன், வறியவர்கள் குறித்து கவனம் செலுத்தவேண்டிய கடப்பாடு அரசாங்கத்திற்கு உள்ளது எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
0 Comments
No Comments Here ..