15,Jan 2025 (Wed)
  
CH
இலங்கை செய்தி

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தன்னை பலசாலியாக காண்பிப்பதற்கு முயல்கின்றது – மகிந்த சமரசிங்க

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தன்னை பலசாலியாக காண்பிப்பதற்கு முயல்கின்றது என முன்னாள் அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியிலிருந்து முன்னாள் அமைச்சர் மகிந்த சமரசிங்க நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலேயே அவர் இந்த விடயத்தினைக் கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தனக்கு அரசியல் செல்வாக்கு இல்லாத நிலையிலும் அவ்வாறான செல்வாக்கு உள்ளதாக காண்பிப்பதற்கான முட்டாள்தனமான முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கட்சியை அடிப்படையாக வைத்து முட்டாள்தனமான தந்திரோபாயங்களை முன்னெடுப்பவர்கள் குறித்து தான் கவலையடைவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தான் சில மாதங்களிற்கு முன்னரே ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவில் இணைந்துவிட்டதாகவும், களுத்துறையில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை தாக்கல் செய்வதற்கு முன்னதாகவே தனக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்புரிமை கிடைத்துவிட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக தனக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி விடுத்துள்ள அறிவிப்பு அர்த்தமற்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.




ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தன்னை பலசாலியாக காண்பிப்பதற்கு முயல்கின்றது – மகிந்த சமரசிங்க

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு