06,May 2024 (Mon)
  
CH
உலக செய்தி

கொரோனா ஹொட் ஸ்பொட் பிரேஸில்

கொரோனா வைரஸ் தொற்று மையமாக பிரேசில் மாறியுள்ளது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

தற்போதைய நிலையில் உலகின் இரண்டாவது கொரோனா ஹொட் ஸ்பொட் ஆக பிரேஸில் மாறியுள்ளது. அமெரிக்காவிற்கு அடுத்ததாக அதிக தொற்றாளர்கள் தற்போது பிரேஸிலிலேயே உள்ளனர். ரஷ்யா மூன்றாமிடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

ஐ.நா ஏஜென்ஸிகளின் தகவல்படி, கொரோனா தாக்கத்தால் நோய்த்தடுப்பு தடுப்பூசி செலுத்தப்படாததால் 80 மில்லியன் குழந்தைகள் அம்மை மற்றும் போலியோ போன்ற அபாயங்களை சந்திக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸில் மத வழிபாடுகளிற்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கப்படுகிறது. முகக்கவசங்கள் அணிவது, சமூகஇடைவெளி பேணுவது உறுதிசெய்யப்பட வேண்டும்.

உலகளவில் 5,303,992 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 340,003 பேர் உயிரிழந்துள்ளனர். 2,158,562 பேர் குணமடைந்துள்ளனர்.

நேற்று 5,252 பேர் உயிரிழந்தனர்.

அமெரிக்கா

நேற்று 1,293 பேர் உயிரிழந்தனர். மொத்த உயிரிழப்பு 97,647 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக 24,197 பேர் உயிரிழந்துள்ளனர். 1,645,094 பேர் மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

பிரேஸில்

உலகில் அதிகமாக தொற்றுக்குள்ளானவர்கள் எண்ணிக்கையில் பிரேஸில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. நேற்று 966 பேர் உயிரிழந்தனர். மொத்த உயிரிழப்பு 21,048 ஆக உயர்ந்தது. புதிதாக 19,969 பேர் பாதிக்கப்பட்டனர். இதுவரை 330,890 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ரஷ்யா

நேற்று 150 பேர் உயிரிழந்தனர். மொத்த உயிரிழப்பு 3,249 பேர் உயிரிழந்தனர். புதிதாக 8,894 பேர் பாதிக்கப்பட்டனர். மொத்தமாக 326,448 பேர் பாதிக்கப்பட்டனர்.

ஸ்பெயின்

நேற்று 688 பேர் உயிரிழந்தனர். மொத்த உயிரிழப்பு 28,628 ஆக உயர்ந்தது. புதிதாக 1,787 பேர் பாதிக்கப்பட்டனர். இதுவரை 281,904 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பிரித்தானியா

நேற்று 351 பேர் உயிரிழந்தனர். இதுவரை 36,393 பேர் உயிரிழந்தனர். புதிதாக 3,287 பேர் தொற்றிற்குள்ளாகினர். இதுவரை 254,195 பேர் பாதிக்கப்பட்டனர்.

ஜூன் 8 ஆம் திகதி முதல் பிரிட்டனிற்குள் நுழையும் அனைத்து வெளிநாட்டு பயணிகளும் 14 நாள் தனிமைப்படுத்தப்படுவார்கள். இந்த விதிமுறையை மீறுபவர்கள் 1,218 டொலர் அபாரம் செலுத்த வேண்டும்.

மெக்சிக்கோ

நேற்று 420 பேர் உயரிழந்தனர். இதுவரை 6,510 பேர் உயிரிழந்தனர். புதிதாக 2,973 பேர் பாதிக்கப்பட்டனர். இதுவரை 59,567 பேர் பாதிக்கப்பட்டனர்.

மெக்சிக்கோ வரலாற்றில் முதன்முறையாக, கால்பந்து லீக் போட்டிகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

சிலி

தலைநகர் சாண்டியாகோவில் ஏழை மக்கள் வசிக்கும் புறநகரான செர்ரிலோஸில் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை பொதுமக்கள் உணவு கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த மார்ச் இறுதியில் இருந்து சிலி லொக் டவுன் செய்யப்பட்டுள்ள நிலையில், உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டதையடுத்து இந்த போராட்டம் வெடித்தது.

போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு, கண்ணீர்ப்புகை, நீர்த்தாரை பிரயோகம் நடத்தப்பட்டது.

பசியை போக்க எங்களிற்கு வேறு வழியில்லையென போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.




கொரோனா ஹொட் ஸ்பொட் பிரேஸில்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு