வாயு கசிவால் 12 பேர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எல்ஜி கெம் என்றழைக்கப்படும் தென்கொரிய நிறுவனமான எல்ஜி கெமிக்கலின் இந்திய தொழிற்சாலை பிரிவின் கவனக்குறைவே காரணம் என அந்த நிறுவனம் மீது குற்றம்சாட்டப்பட்டது.
ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தின் புறநகர் பகுதியில் உள்ள எல்ஜி பாலிமர்ஸ் ஆலைக்கு அருகே வாழ்ந்துவந்த மக்கள், மே மாதம் 7-ஆம் தேதியன்று அதிகாலையில் அங்கு வீசிய கடுமையான நெடியை உணர்ந்தவாறே கண் விழித்தனர்.
தங்கள் கண்களில் அரிப்பையும், எரிச்சலையும் உணர்ந்த அந்த மக்கள்,தங்கள் வீட்டை விட்டு உடனடியாக வெளியேறினர். தங்கள் அண்டை வீட்டாரையும் உடனடியாக வீட்டை விட்டு செல்லும்படி அவர்கள் கூறினர். அந்த நாளின் காலையில் வெளியான காணொளிகள் மக்கள் மூச்சுவிட சிரமப்படுவதையும், வீதிகளில் மயக்கமடைந்த நிலையில் இருந்ததையும் காண்பித்தன.
அந்த பகுதியில் வாழ்ந்துவந்த ஆயிரக்கணக்கானோர் அவர்களின் வீடுகளில் இருந்து பாதுகாப்பு காரணங்களுக்காக வெளியேற்றப்பட்டனர். மூச்சுவிடுவதற்கு சிரமப்பட்ட நூற்றுக்கணக்கானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இரண்டு குழந்தைகள் உட்பட 12 பேர் இறந்துள்ளனர். மாடு, எருமை,நாய்கள் உட்பட 32 கால்நடைகளும் இதில் உயிரிழந்துள்ளன.
இந்த சம்பவத்தில் உயிர் பிழைத்தவர்கள், ரசாயன பொருட்களின் தாக்கத்தால் தொடர்ந்து மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
0 Comments
No Comments Here ..