பங்களாதேஷில் சிக்கித்தவித்த 276 பேர் விசேட விமானம் மூலம் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.
ஸ்ரீலங்கன் ஏயார் லைன்ஸிற்கு சொந்தமான விசேட விமானம் மூலம் குறித்த 276 பேரும் பங்களாதேஷிலிருந்து அழைத்து வரப்பட்டுள்ளனர்.
இன்று அதிகாலை 1.50 மணியளவில் குறித்த விமானம், 276 இலங்கையர்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.
இந்நிலையில் நாடு திரும்பிய அனைவரையும் தொற்று நீக்கல் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் அவர்களை தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கைகளை இராணுவத்தினர் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments
No Comments Here ..