15,Jan 2025 (Wed)
  
CH
இந்திய செய்தி

தமிழகத்தில் 15 ஆயிரத்தைக் கடந்தது

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 759 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 15,512 ஆகவும் 5 பேர் உயிரிழந்த நிலையில், உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 103 ஆகவும் அதிகரித்துள்ளது.

தமிழக சுகாதாரத்துறை இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிழகத்தில் இன்று 759 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் மஹாராஷ்டிரா – 24 பேர், ராஜஸ்தான் – 6 பேர், மேற்குவங்கம் -3 பேர், டெல்லி, தெலுங்கானா, உ.பி., ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்து வந்த தலா ஒருவர், பிலிப்பைன்சில் இருந்து வந்தவர்கள் 5 பேர், லண்டனில் இருந்து வந்தவர்கள் 7 பேரும் உள்ளடங்குவர்.

இந்நிலையில், தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 15,512 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, இன்று சென்னையில் 5 பேர் கொரோனாவால் உயிரிழந்ததால், மொத்த உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 103 ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை, ஒரே நாளில் 363 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் மொத்தமாக வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 7,491 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் தற்போது 7,915 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று மட்டும் மொத்தமுள்ள 68 பரிசோதனை மையங்கள் மூலமாக 12,155 மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளன.

தமிழகத்தில் மொத்த பாதிப்புகளில் 12 வயதுக்கு உட்பட்டவர்கள் 948 பேரும் 13 முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்கள் 13,286 பேரும் 60 வயதை கடந்தவர்கள் 1,278 பேரும் உள்ளனர் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.




தமிழகத்தில் 15 ஆயிரத்தைக் கடந்தது

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு