அரசின் ஊழல்களை மாவட்ட வாரியாக பட்டியலிடவும், தமிழக அரசின் பொய் வழக்குகளை எதிர்கொள்ள வழக்கறிஞர்கள் குழு அமைக்கவும் தி.மு.க. எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை காணொலிக் காட்சி வழியாக நடைபெற்றது.
இக்கூட்டத்தின் துவக்கத்தில், திமுக துணைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட அந்தியூர் ப.செல்வராஜ், எம்.பி.,க்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, நேற்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்.பி., அவர்களை அ.தி.மு.க. அரசு கைது செய்தபோது, அவருக்கு இடைக்கால பிணை பெற்றிட நீதிமன்றத்தில் வாதாடிய தி.மு.க. சட்டத்துறைக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
அத்தோடு மாவட்ட வாரியாக வழக்கறிஞர்கள் குழு அமைப்பது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அ.தி.மு.க. அரசின் அநீதியை தட்டிக் கேட்கவும், அரசின் ஊழல்களை மாவட்ட வாரியாக பட்டியலிடவும், பாதிக்கப்படும் தொண்டர்களை அடக்குமுறையிலிருந்து பாதுகாக்கவும் வழக்கறிஞர் குழு அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தி.மு.க. தோழர்கள், தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகளை பொய் வழக்கில் கைது செய்யப்படுவதற்கு கண்டனம் தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
0 Comments
No Comments Here ..