08,May 2024 (Wed)
  
CH
ஆன்மிகம்

இன்றைய ராசிபலன்


மேஷம்

  • மேஷம்: குடும்பத்தில் உள்ளவர் களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். உங்களை தவறாக நினைத்துக் கொண்டிருந்த அவர்களின் மனசு மாறும். வியாபாரத்தில் அனுபவ மிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரண மாக முடிப்பீர்கள். சவால்களை முடிக்கும் நாள்.

ரிஷபம்

  • ரிஷபம்: சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள்.வெளிவட்டாரத்தில் மற்றவர் களால் மதிக்கப்படுவீர் கள். பணப்புழக்கம் கணிசமாக உயரும். வியாபாரத்தில் முயற்சிகள் பலிதமாகும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மகிழ்ச் சியான நாள்.

மிதுனம்

  • மிதுனம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் திட்டமிடாத செலவுகளும், பயணங்களும் குறுக்கிட் டாலும் சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். உறவினர்கள் நண்பர்கள் அதிக உரிமை எடுத்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் பற்று வரவு சுமாராக தான் இருக்கும். உத்தியோ கத்தில் விமர்சனங்களை ஏற்று கொள்வது நலது. விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.

கடகம்

  • கடகம்: கணவன்- மனைவிக்குள் மனம் விட்டு பேசுவது நல்லது. சகோதர வகையில் சங்கடங்கள் வரும். பழைய பிரச்சினைக்கு சுமூக தீர்வு காண்பது நல்லது. வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். எதிலும் கவனமுடன் செயல்பட வேண்டிய நாள்.

சிம்மம்

  • சிம்மம்: எதையும் சமாளிக் கும் சாமர்த்தியம் பிறக்கும். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படு வீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் உங்களின் புது திட்டங்களை அதிகாரிகள் வரவேற்பார்கள். சிறப்பான நாள்.

கன்னி

  • கன்னி: புதிதாக சில முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். பழைய கடனில் ஒருபகுதியை பைசல் செய்வீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி உங்கள் கோரிக்கையை ஏற்பார். மதிப்புக் கூடும் நாள்.

துலாம்

  • துலாம்: கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகளால் மதிப்பு கூடும். புண்ணிய தலங்கள் சென்று வருவீர்கள். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். தெளிவான முடிவுகள் எடுக்கும் நாள்.

விருச்சிகம்

  • விருச்சிகம்: சந்திராஷ்டமம் இருப்ப தால் உணர்ச்சிவசப்பட்டு அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். உங்களின் அணுகு
  • முறையை மாற்றி கொள்வது நல்லது. வியாபாரத் தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் சூட்சுமங்களை உணர்வீர்கள். பொறுமைத் தேவைப்படும் நாள்.

தனுசு

  • தனுசு: கணவன் மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும். புதியவரின் நட்பால் ஆதாயமடைவீர்கள். பழைய பிரச்சினைகளை பேசி தீர்ப்பீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் லாபம் வரும். உத்தியோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். திறமை வெளிப்படும் நாள்.

மகரம்

  • மகரம்: கனிவாக பேசி காரியம் சாதிப்பீர்கள். பிள்ளைகளால் அந்தஸ்து உயரும். உங்களை நாடிவந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் ஆதாயம் அடைவீர்கள். தொட்டதுதுலங்கும் நாள்.

கும்பம்

  • கும்பம்: புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். பிள்ளைகளின் உயர்கல்வி உத்தியோகம் குறித்து யோசிப்பீர்கள். அக்கம் - பக்கம் வீட்டார் உதவுவார்கள். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரி கள் வலிய வந்து உதவுவார்கள். கனவு நனவாகும் நாள்.

மீனம்

  • மீனம்: எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். பழைய கடனை தீர்க்க புது வழி பிறக்கும். கலை பொருட்களை வாங்குவீர்கள். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சிகிட்டும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்தி யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிடைக் கும். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.





இன்றைய ராசிபலன்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு