கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட சமூக இடைவெளி விதி நடைமுறைகள் ஜூன் 29 ஆம் ஆம் திகதிவரை தொடரும் என ஜேர்மனி அரசாங்கம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து அமைச்சு வெளியிட்ட அறிக்கையில், “கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் ஒப்புதல் அளித்துள்ளன. இதனைத் தொடர்ந்து ஜூன் 29 ஆம் திகதி வரை சமூக இடைவெளி விதிகள் மற்றும் சில கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
8.3 கோடி மக்கள்தொகையைக் கொண்டிருக்கும் ஜேர்மனியில் 35 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றுக்கான பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. இதில் 1இலட்சத்து 81 ஆயிரத்து 288 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதில் 8,498 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 1 இலட்சத்து 62 ஆயிரம் பேர் குணமடைந்துள்ள நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்னர் எல்லைக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தியது.
தற்போது ஜேர்மனி கொரோனா வைரஸ் பரவலின் முதல் கட்டத்தைக் கடந்துவிட்டாலும், தொடர்ந்து சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படும் என அதிபர் அங்கலா மெர்கல் சில வாரங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார்.
0 Comments
No Comments Here ..