தமிழர்களின் உண்மையான பிரச்சனையை அறிந்திருந்த ஆறுமுகன் தொண்டமான், அந்த காலகட்டத்தில் செயற்பட்டுவந்த சக்திவாய்ந்த பயங்கரவாத அமைப்பினால் பிரயோகிக்கப்பட்ட அழுத்தங்களுக்கு மத்தியிலும் தமிழர்களுக்கான தனி நாடு என்ற கருத்துக்கு ஆதரவளிக்க அவர் உறுதியாக மறுத்து நின்றார் என புகழாரம் சூட்டியுள்ளார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச.
அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் மறைவிற்கு அவர் வெளியிட்ட அஞ்சலிக் குறிப்பிலேயே இது குறிப்பிடப்பட்டுள்ளது.
அவரது அஞ்சலியில்,
நலிவுற்ற தோட்டத் தொழிலாளர்களின் பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்திற்காகத் தன்னை அர்ப்பணித்திருந்த – இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் சமூக வலுவூட்டல், தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான கெளரவ ஆறுமுகம் தொண்டமான் அவர்களின் அகால மறைவு பற்றி அறிந்து நான் மிகவும் கவலையடைகிறேன்.
தனக்கு முன்னோடியாக இருந்த தனது பாட்டனாரும் மூத்த தலைவருமான சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் மகத்தான பணியை முன்னெடுத்துச் சென்ற ஆறுமுகம் தொண்டமான் அவர்கள் – மலையகத் தமிழ் சமூகத்தின் மனக்குறைகளைத் தீர்ப்பதற்காகத் தைரியமாகச் செயற்பட்ட சேவகன் ஆவார்.
தமிழ் சமூகம் முகம்கொடுத்திருந்த பிரச்சினைகளைச் சரியாக அறிந்திருந்த தொண்டமான் அவர்கள், அதற்காக தனது அரசியல் வாழ்க்கையை அர்ப்பணித்திருந்தார்.
அந்த காலகட்டத்தில் செயற்பட்டுவந்த சக்திவாய்ந்த பயங்கரவாத அமைப்பினால் பிரயோகிக்கப்பட்ட அழுத்தங்களுக்கு மத்தியிலும் – தமிழர்களுக்கான தனி நாடு என்ற கருத்துக்கு ஆதரவளிக்க அவர் உறுதியாக மறுத்து நின்றார்.
முன்னேற்றங்களின்றி நலிவடைந்திருந்த தொழிலாளர்களாகக் கருதப்பட்ட பெருந்தோட்டச் சமூகத்தின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கான தனது பாட்டனாரின் முயற்சியை அவர் தொடர்ந்தும் முன்னெடுத்தார்.
சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களினால் ஆரம்பிக்கப்பட்டு, ஆறுமுகம் தொண்டமான் அவர்களினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் காரணமாக – இன்று தோட்டச் சமூகத்தினர் உயர்ந்த வாழ்க்கைத் தரத்தை அடைந்துள்ளனர்.
அரசியல் கட்சிகளுடன் இணைந்தும் சமாந்தரமாகவும் செயற்படும் போது – மூலோபாய இடைவினையாற்றுதல் பற்றிய ஒரு தீவிர அவதானியாகவும் மாணவராகவும் இவர் இருந்தார்.
அவரது முக்கிய அக்கறை – தன்னை அவர்களது மறுக்கப்படமுடியாத தலைவராக ஏற்றிருந்த சமூகத்தின் உரிமைகளை வெல்வதாகவே இருந்தது.
ஆறுமுகம் தொண்டமான் அவர்களின் செயற்திறன் மிக்க அரசியல் மற்றும் மதிநுட்பத்தின் இழப்பு – அவரது சமூகத்திற்கும் எமது நாட்டிற்கும் ஒரு பேரிழப்பாகும்.
மக்கள்நேய அரசியல்வாதியான ஆறுமுகம் தொண்டமான் அவர்களின் மறைவுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
கெளரவ அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் அவர்களின் ஆத்மா அமைதியடையட்டும் என பிரார்த்திக்கின்றேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது
0 Comments
No Comments Here ..