22,Jan 2025 (Wed)
  
CH
இலங்கை செய்தி

அசாத் சாலிக்கு மெய்ப்பாதுகாவலர்களை வழங்க உத்தரவு!

தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலிக்கு தேவையான மெய்ப்பாதுகாப்பு அதிகாரிகளை வழங்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, பதில் காவல்துறைமா அதிபருக்கு அறிவித்துள்ளார்.

பாராளுமன்ற தேர்தல் 2020- அரசியல்வாதிகள், முன்னாள் ஆளுநர்களுக்கான மெய்ப்பாதுகாப்பு அதிகாரிகளை நியமித்தல் எனும் தலைப்பில் பதில் காவல்துறைமா அதிபர் சீ.டி. விக்ரமரத்னவுக்கு அனுப்பியுள்ள கடிதத்திலே இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளார்.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

முன்னாள் ஆளுநர் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி ஒன்றின் தலைவராக செயற்படும் அஸாத் சாலிக்கு வழங்கப்பட்டிருந்த மெய் பாதுகாப்பு கடந்த 2019.11.30 ஆம் திகதியில் இருந்து நீக்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

முன்னாள் ஆளுநர்களுக்கு தற்போதும் மெய்ப்பாதுகாப்பாளர்கள் வழங்கப்படுகின்றன நிலையில், முன்னாள் ஆளுநர், பாராளுமன்ற தேர்தலில் தேசிய பட்டியல் வேட்பாளரும் ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் கட்சி ஒன்றின் தலைவருமான அஸாத் சாலிக்குரிய மெய்ப்பாதுகாப்பாளர்கள் நீக்கியமை உசிதமான காரியமல்ல என தேர்தல்கள் ஆணைக்குழு அவதானித்துள்ளது.

அதனால் அஸாத் சாலிக்கு மீண்டும் போதுமான மெய்ப்பாதுகாப்பு அதிகாரிகளை வழங்க வேண்டும். அவ்வாறு பாதுகாப்பு வழங்க முடியாது எனின் அது தொடர்பான காரணங்கள் அடங்கிய அறிக்கை ஒன்றை அனுப்பி தேர்தல்கள் ஆணைக்குழுவை அறிவுறுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த கடிதத்தின் பிரதி ஒன்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் அஸாத் சாலிக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.




அசாத் சாலிக்கு மெய்ப்பாதுகாவலர்களை வழங்க உத்தரவு!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு