29,Apr 2024 (Mon)
  
CH
இந்திய செய்தி

இந்தியாவில் கொரோனாவால் ஒரு இலட்சத்து 58 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு

இந்தியாவில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 58 ஆயிரத்து 333 ஆக அதிகரித்துள்ளது.

அதேநேரம் இந்தியாவில் மொத்தமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,534 ஆக பதிவாகியுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறுத் திட்டங்களை வகுத்து வருகிறது.

வைரஸ் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்தல் உள்ளிட்ட பல்வேறு நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெறுகின்றன.

எனினும் நாடு முழுவதும் வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை மற்றும் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

குறிப்பாக தமிழக்கத்திலும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிக்கிறது.

இந்நிலையில், தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிழகத்தில் நேற்று மேலும் 817 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 678 பேர் தமிழகத்திலும் 138 பேர் மஹாராஷ்டிராவில் இருந்தும் ஒருவர் கேரளாவில் இருந்தும் வந்தவர்கள். இதனால் மொத்த பாதிப்பு 18,545 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாடளாவிய ரீதியில், தொற்றுக்குள்ளான 247 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மொத்த எண்ணிக்கை 158333 ஆக அதிகரித்துள்ளது.

அதேநேரம் இந்த நோய்த் தொற்று காரணமாக நாடளாவிய ரீதியில், 4534 பேர் இதுவரையில் உயிரிழந்துள்ளனர்.

மேலும் 67749 பேர் குணமடைந்துள்ளனர் என்பதுடன், தற்போது 85803 பேர் தொடர்ந்தம் வைத்தியசாலைகளில் சிகிச்சைப்பெற்று வருகின்னர். மேலும் அவர்களில் 8944 பேர் தொடர்ந்தும் கவலைக்கிடமாக இருப்பதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.




இந்தியாவில் கொரோனாவால் ஒரு இலட்சத்து 58 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு