13,Jul 2025 (Sun)
  
CH
கனடா

கொரோனா பாதிப்பு குறைந்து உயிரிழப்பின் எண்ணிக்கை அதிகரிப்பு

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் பாதிப்பின் எண்ணிக்கை குறைந்து, உயிரிழப்பின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும், கனடாவில் வைரஸ் தொற்றால் 126பேர் உயிரிழந்ததோடு, 872பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த மார்ச் 29ஆம் திகதிக்கு பிறகு வைரஸ் தொற்று பாதிப்பின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இறுதியாக 665பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்.

அதேபோல, வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கடந்த 14ஆம் திகதிக்கு பிறகு அதிகரித்துள்ளது. இறுதியாக 176பேர் அதிகபட்சமாக உயிரிழந்திருந்தனர்.

இதற்கமைய உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6,765ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 87,519ஆக அதிகரித்துள்ளது.

மேலும், 34,590பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, 46,164பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதுதவிர, 502பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.




கொரோனா பாதிப்பு குறைந்து உயிரிழப்பின் எண்ணிக்கை அதிகரிப்பு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

Today Actress

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு