20,Apr 2024 (Sat)
  
CH
ஆன்மிகம்

கண் திருஷ்டியும், எதிர்மறை எண்ணங்களும் நம்மை தாக்காமல் இருக்க, உப்பு குளியல் போடும் சரியான முறை

அந்த காலங்களில் எல்லாம் தீராத பிரச்சினைகள் இருந்தால், கடலில் அருகிலிருக்கும் கோவில்களுக்கு சென்று, கடலில் மூழ்கி குளித்துவிட்டு, இறைவனை தரிசனம் செய்துவிட்டு வந்தால் பிரச்சினைகள் விரைவாக தீரும் என்று நம் முன்னோர்களால் சொல்லப்பட்டுள்ளது. இதற்கு காரணம் கடல் தண்ணீரில் இருக்கும் உப்பு தன்மை தான். உப்பு கலந்த தண்ணீரில் நாம் தலை முழுகும் போது, நம்மை பிடித்திருக்கும் தரித்திரமும், கண்திருஷ்டியும் நீங்கும் என்பதும் நாம் எல்லோரும் அறிந்த ஒன்று தான். இதை தவிர, இந்த தண்ணீருக்கு பிராண சக்தி என்ற ஒன்றும் இருக்கிறது. பிராண சக்தி என்றால் என்ன? குறிப்பாக இந்த உப்பு குளியலை வீட்டிலேயே நாம் முறைப்படி எப்படி செய்ய வேண்டும்? எந்த கிழமையில் செய்ய வேண்டும்? எப்போது உப்பு குளியல் போட கூடாது. என்பதைப் பற்றி இந்த பதிவின் மூலம் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

பொதுவாகவே நாம் குடிப்பதற்காக பயன்படுத்தும் தண்ணீரில் கட்டாயம் பிராண சக்தி இருக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் அந்த தண்ணீரை குடிப்பதன் மூலம் நமக்கு எந்த உபயோகமும் இருக்காது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. அந்த காலங்களில், குடிக்கின்ற தண்ணீரில் ஒரு சோதனையை செய்து பார்ப்பார்கள். புதியதாக கிணறு தோண்டினாலும், புதியதாக போர் போட்டாலும், அதிலிருந்து எடுக்கப்பட்ட தண்ணீரில் மீன் குஞ்சுகளை விட்டு, அந்த மீன் குஞ்சானது ஒரு நாள் வரை இறந்து போகாமல் வாழ்கின்றதா, என்று பரிசோதித்து பார்ப்பார்கள்

அந்த தண்ணீரானது, மீன் உயிர்வாழ தகுதியான தண்ணீர் என்றால், அதை குடிப்பதற்கு பயன்படுத்துவார்கள். அப்படியில்லை என்றால், அந்த தண்ணீரை, குடிப்பதற்காக பயன்படுத்த மாட்டார்கள். ஆனால் இந்த காலகட்டத்தில் தண்ணீர் கிடைப்பது என்பது மிகவும் அரிதாக உள்ளது என்பதால், இந்த பிராண சக்தியை பற்றி எல்லாம் நாம் கவலைப்படுவதே இல்லை. காலம் மாறும் கொண்டிருப்பதற்கு ஏற்ப, இந்தப் பழக்கமும் மாறிப்போய் விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். நிறைய பேருக்கு பிராண சக்தி என்ற ஒன்று தண்ணீரில் இருக்கின்றது என்று கூட தெரியாமல் இருந்திருக்க வாய்ப்பு உள்ளது

சரி. என்ன செய்வது சூழ்நிலைக்கு ஏற்ப நம்முடைய வாழ்க்கையை நல்ல முறையில் எப்படி மாற்றி அமைத்துக் கொள்ளலாம் என்பதை பற்றி தான் நாம் சிந்திக்க வேண்டும். வேறு வழியில்லை. அடுத்ததாக உப்பு குளியலை முறையாக எப்படி குளிக்கவேண்டும் என்பதைப் பற்றி தெரிந்து கொள்ளலாம். உப்பு குளியலுக்கு கட்டாயம் கல் உப்பைப் பயன்படுத்த வேண்டும் என்பதை மறந்து விடாதீர்கள்.

பெண்களாக இருந்தால், வாரம் ஒரு முறை வெள்ளிக்கிழமை அன்று உப்பு தண்ணீரில் குளிப்பது மிகவும் நல்லது. ஆண்களாக இருந்தால் சனிக்கிழமை தலைக்கு குளிக்கும்போது உப்பு குளியல் செய்வது மிகவும் நல்லது. குளிக்கிற தண்ணீரில் இரண்டு கைப்பிடி அளவு உப்பை சேர்த்து, நன்றாக கரைத்து விட்டு அந்த தண்ணீரை தலையில் ஊற்றி குளித்து விட வேண்டும். உப்பின் பிசுபிசுப்பு தன்மை உங்கள் உடலில் ஒட்டி இருப்பது போல் தோன்றும் பட்சத்தில், அதன் பின்பு சாதாரண தண்ணீரை ஊற்றி குளித்துக் கொள்வது எந்த ஒரு தவறும் இல்லை.

பெண்களாக இருந்தால், வாரம் ஒரு முறை வெள்ளிக்கிழமை அன்று உப்பு தண்ணீரில் குளிப்பது மிகவும் நல்லது. ஆண்களாக இருந்தால் சனிக்கிழமை தலைக்கு குளிக்கும்போது உப்பு குளியல் செய்வது மிகவும் நல்லது. குளிக்கிற தண்ணீரில் இரண்டு கைப்பிடி அளவு உப்பை சேர்த்து, நன்றாக கரைத்து விட்டு அந்த தண்ணீரை தலையில் ஊற்றி குளித்து விட வேண்டும். உப்பின் பிசுபிசுப்பு தன்மை உங்கள் உடலில் ஒட்டி இருப்பது போல் தோன்றும் பட்சத்தில், அதன் பின்பு சாதாரண தண்ணீரை ஊற்றி குளித்துக் கொள்வது எந்த ஒரு தவறும் இல்லை.

யாரோ ஒருவர் மூலமாக, கண் திருஷ்டி நம் மேல் விழுந்து கொண்டு தான் இருக்கின்றது. யாரோ ஒருவரின் கெட்ட எண்ணம், எதிர்மறை ஆற்றலாக, எதிர்மறை சிந்தனையாக மாறி, நம்மை தாக்கிக் கொண்டுதான் இருக்கின்றது. இப்படிப்பட்ட பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றால், வாரம் ஒரு முறை இந்த உப்பு குளியல் செய்வது எந்த ஒரு தவறும் இல்லை. இப்படி தொடர்ந்து, எவர் ஒருவர் உப்பு குளியலை மேற்கொண்டு வருகின்றாரோ, அவருக்கு வாழ்க்கையில் தடைகளற்ற முன்னேற்றம் ஏற்படும்




கண் திருஷ்டியும், எதிர்மறை எண்ணங்களும் நம்மை தாக்காமல் இருக்க, உப்பு குளியல் போடும் சரியான முறை

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு