25,Apr 2024 (Thu)
  
CH
ஆன்மிகம்

இன்றைய ராசிபலன்


மேஷம்

  • மேஷம்: புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிக்க தொடங்குவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபார ரீதியாக சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். கனவு நனவாகும் நாள்.

ரிஷபம்

  • ரிஷபம்: எதிர்பார்த்தவைகளில் சில தள்ளி போனாலும் எதிர்பாராத ஒரு வேலை முடியும். தாயாருடன் கருத்து மோதல்கள் வரக்கூடும். பணப்பற்றாக்குறையை சமாளிப்பீர்கள். புதுவேலை கிடைக்கும். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உழைப்பால் உயரும் நாள்.

மிதுனம்

  • மிதுனம்: திட்டவட்டமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். அதிகார பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் கமிஷன் ஸ்டேஷனரிவகைகளால் லாபமடைவீர்கள். உத்தியோகத்தில்உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டிய நாள்.

கடகம்

  • கடகம்: கணவன் -மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். முன்கோபம் குறையும். நீண்ட நாட்களாக தள்ளி போன விஷயங்கள் உடனே முடியும். உடல் நிலை சீராகும். உறவினர்களால் உதவிகள் கிடைக் கும். வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளை கற்றுகொள்வீர்கள். உத்தியோகத்தில் அலுவலகத்தில் மரியாதை கூடும். மனசாட்சிபடி செயல்படும் நாள்.

சிம்மம்

  • சிம்மம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் ஒரே நேரத்தில் இரண்டுமூன்று வேலைகளை இழுத்துப் போட்டுப் பார்க்க வேண்டி வரும். உங்களைப் பற்றி தவறாக சிலர் பேசினாலும் அதற்காக வருத்தப்படாதீர்கள். வியாபாரத்தில் புது முயற்சிகளைத் தவிர்க்கவும். உத்தியோகத்தில் மற்றவர் உடைகளில் கவனம் செலுத்த வேண்டாம். எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள்.

கன்னி

  • கன்னி: இன்றைய தினம் வேலைச்சுமையால் சோர்வு அடைவீர்கள்.அனாவசிய செலவுகளை குறைக்கப்பாருங்கள். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் விட்டு கொடுத்துப் போவது நல்லது. கவனமுடன் செயல்பட வேண்டிய நாள்.

துலாம்

  • துலாம்: புதிய கோணத்தில்யோசித்து பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய வழி வகை பிறக்கும். வியாபாரத்தில்வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். பெருந்தன்மையுடன் நடந்துக் கொள்ளும் நாள்.

விருச்சிகம்

  • விருச்சிகம்: நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். உறவினர் நண்பர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்துக் கொள்வார்கள். விலகி நின்றவர்கள் விரும்பிவருவார்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். புதிய முயற்சிகள் நிறைவேறும் நாள்.

தனுசு

  • தனுசு: குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். ஆடை ஆபரணம் சேரும். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.

மகரம்

  • மகரம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் தெளிவான முடிவுகள் எடுக்கமுடியாமல் குழம்புவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் நிறைகுறைகளை எடுத்துச் சொன்னால் கோபப்படாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களிடம் தொழில் ரகசியங்களை சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம். உத்தியோகத்தில் ஈகோ வந்து செல்லும். பொறுமைத் தேவைப்படும் நாள்.

கும்பம்

  • கும்பம்: உங்களின் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். பிள்ளைகளால் மதிப்பு கூடும். கல்யாணப் பேச்சு வார்த்தைசாதகமாக முடியும். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

மீனம்

  • மீனம்: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்று கொள்வார்கள். விருந்தினர்களின் வருகையால்வீட்டில் உற்சாகம் தங்கும். நீண்ட நாட்களாக செல்ல வேண்டுமென்று நினைத்திருந்த இடத்திற்கு சென்று வருவீர்கள். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புதுஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோகத்தில் பெரியபொறுப்புகள் தேடி வரும்.
  • அமோகமான நாள்.





இன்றைய ராசிபலன்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு