இரண்டு பில்லியன் யுரோக்கள் அதாவது இந்திய மதிப்பில் தோராயமாக 1.6 லட்சம் கோடி ரூபாய் செலவினை குறைப்பதற்காக 15 ஆயிரம் பேரைப் பணி நீக்கம் செய்யப்போவதாக அறிவித்துள்ளது ரெனால்ட் நிறுவனம்.
அந்த நிறுவனத்தின் இடைக்கால தலைவரான க்ளோடில்டே, இந்த திட்டம் அத்தியாவசியமானது என கூறி உள்ளார். அந்த நிறுவனமானது மின்சார கார், வேன் தயாரிப்பில் கவனம் செலுத்தப் போவதாகக் கூறி உள்ளது. இதன் காரணமாக பிரான்ஸில் மட்டும் 4,600 பேர் வேலையிழப்பார்கள். அதுமட்டுமல்லாமல் பிரான்ஸில் ஆறு தொழிற்சாலைகளை மூட திட்டமிட்டு வருவதாகவும் அந்நிறுவனம் கூறி உள்ளது.
ரெனால்ட் நிறுவனத்துடன் கார் உற்பத்தியில் இணைந்து செயல்படும் நிசான் நிறுவனமும் பெரிய அளவில் பணியாளர் குறைப்பினை அறிவித்துள்ளது. கொரோனாவுக்கு முன்பே இந்த நிறுவனங்களின் விற்பனை சரிந்து வந்தது குறிப்பிடத்தக்கது
இதே போன்று மைக்ரோசாஃப்ட் நிறுவனம் இவ்வாறான முடிவை எடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகின
மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தன்னுடைய எம்.எஸ்.என் வலைத்தளத்தில் பணிபுரியும் பத்திரிகையாளர்கள் சிலரை வேலையிலிருந்து அனுப்பிவிட்டு அவர்களுக்கு பதிலாக செய்திகளை தேர்ந்தெடுக்க தானாக இயங்கும் அமைப்பை பயன்படுத்த போவதாக அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
எம்.எஸ்.என் வலைதளத்தில் செய்தி நிறுவனங்களின் செய்திகளை தேர்ந்தெடுப்பது, தலைப்புகளை வைப்பது அதற்கேற்ற புகைப்படங்கள் வைப்பது போன்ற வேலைகளை தற்போது பத்திரிகையாளர்கள் செய்து வருகின்றனர்.
0 Comments
No Comments Here ..