06,May 2024 (Mon)
  
CH
உலக செய்தி

கருப்பினத்தவர் கொலை அமெரிக்காவில் போராட்டம் தீவிரம்

கருப்பினத்தவர் கொலை அமெரிக்காவில் போராட்டம் தீவிரமடைகிறது. போராட்டகாரர்கள் மீது கொடூரமான நாய்களை ஏவியிருப்பேன் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறி உள்ளார்.

அமெரிக்காவில் பொலிஸ் அதிகாரியால் கருப்பினத்தவர் கொல்லப்பட்ட விவகாரத்தில் நடைபெற்று வரும்போராட்டத்தில் போராட்டக்காரர்கள் மீது நாய்களை ஏவ வைத்திருப்பேன் என ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் மின்னபொலிஸ் நகரில் கருப்பினத்தவரான ஜோர்ஜ் பிளொய்ட் என்பவர் பொலிஸ் அதிகாரியால் கொலைசெய்யபட்டார். இந்தவிவகாரத்தில் பல்வேறு மாகாணங்களில் ஆர்ப்பாட்டம் மற்றும் கலவரம் வெடித்துள்ளது.

இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஜனாதிபதி ட்ரம்பின் உத்தியோகப்பூர்வ இல்லமான வெள்ளை மாளிகை அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது, மிகவும் கொடூரமான நாய்களை ஏவியிருப்பேன் எனவும், அவர்களை துப்பாக்கி குண்டுகள் பதம் பார்த்திருக்கும் எனவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஆனால் வெள்ளை மாளிகையில் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் அதற்கான வாய்ப்பை ஏற்படுத்தவில்லை எனவும்,

அவர்கள் மிக சாமர்த்தியமாக ஆர்ப்பாட்டக்காரர்களை எதிர்கொண்டதாகவும் ட்ரம்ப் பாராட்டியுள்ளார்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் வெற்று கூச்சலுடனும் முழக்கங்களும் மட்டும் எழுப்பும் நிலைக்கு தள்ளப்பட்டார்கள் எனவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். மின்னபொலிஸ் நகரில் தொடங்கிய போராட்டம் தற்போது நியூயோர்க், டெட்ராய்ட், லொஸ் ஏஞ்சல்ஸ், டல்லாஸ், ஆஸ்டின் மற்றும் போர்ட்லாண்ட் உள்பட பல பகுதிகளுக்கு பரவி உள்ளது




கருப்பினத்தவர் கொலை அமெரிக்காவில் போராட்டம் தீவிரம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு