அரசாங்கத்தினால் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீடு இன்று யாழ் மாவட்ட அரச அதிபரினால் வீட்டு உரிமையாளரிடம் கையளிக்கப்பட்டது.
மீள்குடியேற்றம் மற்றும் பொருளாதார அலுவல்கள், புனர்வாழ்வு அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில், சுமார் 9 இலட்சத்து 95 ஆயிரம் ரூபா நிதியில், இராணுவத்தினரின் சமூக சேவைகளில் ஒன்றாகிய வறுமைக் கோட்டின் கீழ் வாழ்பவர்களுக்கு வீடு அமைத்துக் கொடுக்கும் திட்டத்தின் கீழ், போரால் பாதிக்கப்பட்ட வறிய குடும்பத்திற்கு இந்த வீடு புதிதாக நிர்மாணிக்கப்பட்டு, இன்று (01) உரிமையாளரிடம் கையளிக்கப்பட்டது.
சங்கானை பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஜே/159 சங்கரத்தை துணைவி கிராம சேவையாளர் பிரிவில் நிர்மாணிக்கப்பட்ட வீட்டை யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன், மற்றும் யாழ்.மாவட்ட கட்டளைத்தளபதி ருவான் வணிகசூரிய கையளித்தனர்.
513 பிரிகேட், 51 படைப்பிரிவில், பிரிகேடியர், லலித் ரத்நாயக்கவின் கீழ் இராணுவத்தினரின் பங்களிப்பில் இந்த வீடு நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில், மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன், உதவி அரசாங்க அதிபர் காணி எஸ்.முரளிதரன், இராணுவ உயர் அதிகாரிகள், சங்கானை பிரதேச செயலாளர் உட்பட வட்டுக்கோட்டை பொலிஸ் பொறுப்பதிகாரி உட்பட கிராம சேவையாளர், பிரதேச செயலக அதிகாரிகள், உட்பட இராணுவ அதிகாரிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
0 Comments
No Comments Here ..