09,May 2024 (Thu)
  
CH
ஆன்மிகம்

இன்றைய ராசிபலன்

மேஷம்

  • மேஷம்: சமயோசிதமாகவும் சாதுர்ய மாகவும் பேசி காரியம் சாதிப்பீர்கள். பிள்ளைகளால் புகழ் கௌரவம் உயரும். சொத்து வாங்குவது விற்பது லாபகரமாக முடியும். பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். வெற்றி பெறும் நாள்.

ரிஷபம்

  • ரிஷபம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்க கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உங்களை சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்து கொள் வீர்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். கடையை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் தேடி வரும். புதுமை படைக்கும் நாள்.

மிதுனம்

  • மிதுனம்: கடந்த கால இனிய அனுபவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிகமாகும். திடீர் பயணம் உண்டு. வீடு வாகன பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். எதிர்பாராத உதவி கிட்டும் நாள்.

கடகம்

  • கடகம்: சவால்கள் விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். சொந்த-பந்தங்கள் தேடி வந்து பேசுவார்கள். வெளிவட்டாரத்தில் புதுஅனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் புது யுக்திகளைக் கையாள் வார்கள். வியாபாரத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். அனுபவ அறிவால் சாதிக்கும் நாள்.

சிம்மம்

  • சிம்மம்: இங்கிதமாக பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். உறவினர்கள் நண்பர்களால் நன்மை உண்டு. நம்பிக்கைக்குரியவர்கள் உதவுவார்கள் பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். வியாபாரத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும். புதிய பாதை தெரியும் நாள்.

கன்னி

  • கன்னி: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் உங்களை அறியாமலேயே தாழ்வுமனப் பான்மை தலைதூக்கும். வியாபாரத்தில் வாடிக்கையா ளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்தியோ கத்தில் சக ஊழியர்களால் மறைமுக தொந்தரவு கள் வந்து நீங்கும். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.

துலாம்

  • துலாம்: கணவன்-மனைவிக்குள் அனுசரித்து போவது நல்லது. அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். யாரையும் பகைத்துகொள்ளாதீர்கள். வாகனம் தொந் தரவு தரும். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்சினைகள் உருவாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம். எதிலும் கவனம் தேவைப்படும் நாள்.

விருச்சிகம்

  • விருச்சிகம்: உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். பிரபலங்களால் ஆதாயம் உண்டு. பழைய கடன் பிரச்சினைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடிவருவார்கள். உத்தியோகத்தில் புது பொறுப்பு களை ஏற்பீர்கள். சிறப்பான நாள்.

தனுசு

  • தனுசு: ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். பெற்றோரின் ஆதரவு பெருகும். சில வேலைகளை விட்டு கொடுத்து முடிப்பீர்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரி ஆதரிப்பார். மதிப்புக் கூடும் நாள்.

மகரம்

  • மகரம்: உங்கள் போக்கில் கொஞ்சம் மாற்றம் செய்வீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். சிலர் உங்களை நம்பிபெரிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். அலுவலகத்தில் மரி யாதை கூடும். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.

கும்பம்

  • கும்பம்: சந்திராஷ்டமம் இருப்பதால் பழைய கசப்பான சம்பவங்கள் நினைவுக்கு வரும். புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை குறையும். உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். பொறுமைத் தேவைப்படும் நாள்.

மீனம்

  • மீனம்: கணவன்-மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். தாய் வழியில் மதிக்கப்படுவீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். வியாபாரத்தில் எதிர் பார்த்த லாபம் வரும். உத்தியோகத்தில் மேலதிகாரி மதிப்பார். தன்னம்பிக்கை பிறக்கும் நாள்.





இன்றைய ராசிபலன்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு