06,May 2024 (Mon)
  
CH
இலங்கை செய்தி

கிழக்கிற்கு தனிச்சிங்கள தொல்லியல் ஜனாதிபதி செயலணி!

கிழக்கில் தொல்லியல் மரபிடங்களை முகாமை செய்வதற்கான ஜனாதிபதி செயலணி முற்றுமுழுதாக சிங்களவர்களை மட்டுமே கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது, சிறுபான்மையினரை பேரச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஏற்கனவே சிறுபான்மையினரின் தொல்லியல் அடையாளங்கள் திட்டமிட்டு, அழிக்கப்பட்டு வரும் நிலையில், புதிய செயலணியின் உருவாக்கம் அந்த அச்சத்தை மேலும் அதிகரித்துள்ளது.

பொத்தவிலில் உள்ள சர்ச்சைக்குரிய கடற்கரை விகாரையின் தூண்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக தொல்லியல் துறை வழங்கிய அறிவித்தலை தொடர்ந்து, பாதுகாப்பு செயலாளர் அங்கு சென்று பார்வையிட்டு, கடற்படையினரை பாதுகாப்பில் ஈடுபடுத்தியிருந்தார்.

அந்த தொல்லியல் நிலம் குறித்து வேறுபட்ட தகவல்கள் உள்ளன.

இந்த விவகாரம் சிங்கள இனவாத தரப்பினரால் கையிலெடுக்கப்பட்ட பின்னர், கிழக்கு தொல்லியல் சின்னங்களை முகாமை செய்யும் ஜனாதிபதி செயலணி அமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஜனாதிபதி செயலணியில், பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) கமல் குணரத்ன செயலணியின் தலைவராகவும், ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் திருமதி ஜீவந்தி சேனாநாயக செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

எல்லாவல மேதானந்த நாயக தேரர், சங்கைக்குரிய பனாமுரே திலகவங்ஸ நாயக தேரர், தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் கலாநிதி செனரத் பண்டார திஸாநாயக, காணி ஆணையாளர் நாயகம் சந்திரா ஹேரத், நில அளவையாளர் நாயகம் ஏ.எல்.எஸ்.சீ. பெரேரா, களணி பல்கலைகழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர் ராஜ் குமார் சோமதேவ, பேராதனை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கபில குணவர்தன, மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், கிழக்கு மாகாண காணி ஆணையாளர் எச்.ஈ.எம்.டபிள்யு.ஜீ திஸாநாயக ஆகியோருடன் கடந்த ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்சவிற்காக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்ட தெரண ஊடக வலையமைப்பின் தலைவர் திலித் ஜயவீர ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.




கிழக்கிற்கு தனிச்சிங்கள தொல்லியல் ஜனாதிபதி செயலணி!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு