05,May 2024 (Sun)
  
CH
உலக செய்தி

ஒரு வாரத்திற்கு முன்னரே முடக்கநிலை அறிமுகப்படுத்தப்பட்டிருந்தால் கொவிட்-19 உயிரிழப்பு பாதியாக குறைந்திருக்கும்!

பிரித்தானியாவில் ஒரு வாரத்திற்கு முன்னரே முடக்கிநிலை நடைமுறைப்படுத்தயிருந்தால் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் ஏற்பட்ட உயிரிழப்பு பாதியாக குறைந்திருக்கும் என பிரித்தானிய அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கிய முன்னாள் தொற்றுநோயியல் நிபுணர் நீல் பெர்குசன் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக பிரதமர் பொரிஸ் ஜோன்சன், கடந்த மார்ச் மாதம் 23ஆம் திகதி முடக்கிநிலையை அறிவித்தார்.

எனினும், பிரித்தானியா கொரோனா வைரஸ் தொற்றால் மிகப்பெரிய பாதிப்பை எதிர்கொண்டது. அங்கு இதுவரை 2 இலட்சத்து 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்ததோடு, 41 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இதனிடையே, உலகிலேயே கொரோனா வைரஸ் தொற்றால் அதிக உயிரிழப்பை சந்தித்த இரண்டாவது நாடாக மாறியுள்ள பிரித்தானியாவில், ஒரு வாரத்திற்கு முன்னதாகவே முடக்கிநிலை நடைமுறைப்படுத்தயிருந்தால் உயிரிழப்பின் எண்ணிக்கை பாதியாக குறைந்திருக்கும் என தொற்றுநோயியல் நிபுணர் நீல் பெர்குசன் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘புதிய கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக பிரித்தானியா சரியான நடவடிக்கைகளை எடுத்துள்ளது, ஆனால், அது மிகவும் தாமதமானது. முடக்கநிலை அறிமுகப்படுத்தப்படுவதற்கு 3 முதல் 4 நாட்களுக்கு முன்னர் இந்த தொற்று இரட்டிப்பாக இருந்தது. அதனால், ஒரு வாரத்திற்கு முன்பே முடக்கநிலை நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தி இருந்தால், இறப்பு எண்ணிக்கை குறைந்தபட்சம் பாதியாக குறைந்திருக்கலாம். நிச்சயமாக முன்பே அறிமுகப்படுத்தியிருந்தால் குறைவான இறப்புகளையே பார்த்திருப்போம்’ என கூறினார்.

‘சமூக தொலைதூர வழிகாட்டுதல்களை மீறி ஒரு பெண், அவரது வீட்டிற்கு இரண்டு முறை சென்றிருந்தார்’ என டெய்லி டெலிகிராப் செய்தி வெளியிட்டதை தொடர்ந்து, அரசாங்க கொள்கையை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகித்த முன்னணி தொற்றுநோயியல் நிபுணர் நீல் பெர்குசன், தனது பதவியை இராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.




ஒரு வாரத்திற்கு முன்னரே முடக்கநிலை அறிமுகப்படுத்தப்பட்டிருந்தால் கொவிட்-19 உயிரிழப்பு பாதியாக குறைந்திருக்கும்!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு