09,May 2024 (Thu)
  
CH
ஆன்மிகம்

இன்றைய ராசிபலன்

மேஷம்

  • மேஷம்: தன்னம்பிக்கையுடன் பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். மதிப்புக் கூடும் நாள்.

ரிஷபம்

  • ரிஷபம்: உங்கள் போக்கில் கொஞ்சம் மாற்றம் செய்வீர்கள். உறவினர் நண்பர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உங்களுக்கு முன்னுரிமை தருவார்கள். அந்தஸ்து உயரும் நாள்.

மிதுனம்

  • மிதுனம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த அசதி சோர்வு நீங்கி உற்சாகமடைவீர்கள். குடும்பத்தில் அமைதி திரும்பும். அரைகுறையாக நின்ற வேலைகள் முடியும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் தள்ளிப் போன விஷயங்கள் முடியும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் வரும் . நல்ல மாற்றங்கள் ஏற்படும் நாள்.

கடகம்

  • கடகம்: சந்திராஷ்டமம் இருப்பதால் சிக்கலான சவாலான காரியங்களையெல்லாம் கையில் எடுத்துக் கொண்டிருக்காதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்சினைகள் உருவாகும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் குறை கூறுவார்கள். கவனமுடன் செயல்பட வேண்டிய நாள்.

சிம்மம்

  • சிம்மம்: உங்களின் அறிவாற்றலை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதரர்களின் ஒத்துழைப்பு இருக்கும். தாயாரின் உடல் நிலை சீராகும். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்தியோகத்தில் சகஊழியர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்துக் கொள்வார்கள். திறமை வெளிப்படும் நாள்.

கன்னி

  • கன்னி: ராஜ தந்திரமாக செயல்பட்டு சில காரியங்களை முடிப்பீர்கள். உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். பழைய சிக்கல்கள் தீரும். வியாபாரத்தில் ராஜ தந்திரத்தால் லாபத்தை அதிகரிப்பர். உத்தியோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள். வெற்றி பெறும் நாள்.

துலாம்

  • துலாம்: குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். உங்களை சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். நண்பர்களால் ஆதாயம் உண்டு. நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் புது சலுகைகள் கிடைக்கும். கனவு நனவாகும் நாள்.

விருச்சிகம்

  • விருச்சிகம்: எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும் எதிர்பாராத ஒரு வேலை முடியும். சகோதரி உதவுவார். தாயாருக்கு வீண் டென்ஷன் வந்துப் போகும். புது வேலை அமையும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் வேலைகள் விரைந்து முடியும். நன்மை கிட்டும் நாள்.

தனுசு

  • தனுசு: குடும்பத்தினருடன் சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். பூர்வீக சொத்து பிரச்சினைக்கு சுமூக தீர்வு கிடைக்கும். புதியவரின் நட்பு கிடைக்கும். விருந்தினர்களின் வருகையால் வீடு களை கட்டும். வியாபாரத்தில் புகழ்பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.

மகரம்

  • மகரம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனக்கசப்புகள் நீங்கி மகிழ்ச்சி பொங்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். பிரச்சனைகளுக்கு எளிதாக தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மகிழ்ச்சியான நாள்.

கும்பம்

  • கும்பம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சிலரின் விமர்சனங்களுக்கும் கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பின்மையால் லாபம் குறையும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் உங்கள் பெயர் கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய நாள்.

மீனம்

  • மீனம்: விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும்.விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாளுங்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் விட்டு கொடுத்துப் போங்கள். அலைச்சல் அதிகரிக்கும் நாள்.





இன்றைய ராசிபலன்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு