24,Aug 2025 (Sun)
  
CH
இலங்கை செய்தி

மூத்த அறிவிப்பாளர் நடராஜசிவம் காலமானார்

இலங்கை வானொலியின் மூத்த அறிவிப்பாளர்களில் ஒருவரான சின்னையா நடராஜசிவம் காலமானர்.

நேற்று இரவு 11.30 மணியளவில் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் அவர் காலமாகியுள்ளார். தனது 74 ஆவது வயதில் அவர் காலமாகியுள்ளார்.நீண்டகாலமாக இலங்கை ஔிபரப்பு கூட்டுத்தாபனத்தில் அவர் பணியாற்றி இருந்தார். இவர் திறமை வாய்ந்த வானொலி, தொலைக்காட்சி, திரைப்பட, மேடை நடிகராவார்.

´ஒதெல்லோ´, ´நத்தையும் ஆமையும்´ முதலான பல வானொலி நாடகங்களில் நடித்ததோடு, ஒலிச்சித்திரங்களிலும் பங்குபற்றியிருக்கிறார்.

ரூபவாஹினியில் தயாரிக்கப்பட்ட முதலாவது தொலைக்காட்சி நாடகம் என்ற பெருமையைப்பெற்ற, கலாநிதி ஜே. ஜெயமோகன் எழுதிய ‘கற்பனைகள் கலைவதில்லை’ என்ற நாடகத்தில் கதாநாயகனாக நடித்தவர். தொடர்ந்து பல சிங்களத் தொடர் நாடகங்களில் நடித்தவர்.

தென்னிந்திய நடிகை ராதிகா தயாரித்த, மனோபாலா இயக்கிய ‘ மீண்டும் மீண்டும் நான்’ நாடகம் குறிப்பிடத்தக்கது. அது மட்டுமல்ல திரைப்படங்களிலும் தன பங்களிப்பை வழங்கியிருக்கிறார்.

இந்தியக் கலைஞர்களும் இணந்து நடித்த பாதை மாறிய பருவங்கள்”, புலம் பெயர்ந்தவர்களால் இலங்கையில் தயாரிக்கப்பட்ட ‘காதல்கடிதம்’ ‘திரிசூல’ – சிங்களத் திரைப்படம் ‘யுக கினிமத்த’ – சிங்களத் திரைப்படம், ‘திகவி’ – சிங்களத்திரைப்படம் முதலானவை குறிப்பிடத்தக்கவை.

இவரது மனைவியும் பிரபல அறிவிப்பாளர் புவனலோஜினி என்பது குறிப்பிடத்தக்கது.




மூத்த அறிவிப்பாளர் நடராஜசிவம் காலமானார்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு